தென்கொரியாவின் எல்லை அலுவலகம் தகர்ப்பு; தயார் நிலையில் வடகொரிய ராணுவம்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பியோங்யாங்: வட - தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 1950களில் நடந்த கொரியப் போரின் போது வட கொரியாவும், தென் கொரியாவும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில், கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது. அங்கு, இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் உள்ளது. கடந்த 2018ல் இரு நாடுகளும் இடையே பேச்சு வார்த்தை துவங்கிய பின், இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் மறுசீரமைக்கப்பட்டது.latest tamil news
இந்நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை, சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. 'வட கொரிய ஆட்சிக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் தென் கொரியாவிலிருந்து அனுப்பப்படுவது தடுக்கப்படும்' என, 2018ல் இரு நாட்டுத் தலைவர்கள் இடையே நடந்த உச்சி மாநாட்டில் தென் கொரியா உறுதியளித்தது. ஆனால், சமீபத்தில் பலூன் பிரசுரங்கள் வட கொரிய எல்லைக்கு வந்துள்ளன.
இதனால் கடும் கோபமடைந்த, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங், 'ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ராணுவத்துக்கு உடுத்தவிட்டுள்ளோம். கேசாங் நகரில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும்' என, சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார்.


latest tamil news
இந்நிலையில், கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் இருக்கும் இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிகளுக்குள் தங்கள் ராணுவத்தை அனுப்ப, ஒரு செயல்திட்டத்தை ஆராய்ந்து வருவதாக வட கொரிய ராணுவம் இன்று (16ம் தேதி) கூறியுள்ளது. மேலும், அரசு உத்தரவுகளை செயல்படுத்த உயர் எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.


latest tamil news
வட கொரியாவிலிருந்து தப்பித்து தென் கொரியா வந்தவர்களைக் கொண்ட குழு தான், தென் கொரிய எல்லையிலிருந்து, வட கொரிய அரசை விமர்சிக்கும் பிரசுரங்கள், உணவு, செய்தித் தாள்கள், கொரிய நாடகங்கள், வானொலி போன்றவற்றைக் கொண்ட பெரிய பலூன்களை வட கொரியா நோக்கி அனுப்பி வருகிறது. அந்த குழுவின் செயல்களால், எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், அந்த குழுக்களைத் தடுக்க தென் கொரிய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
16-ஜூன்-202016:02:36 IST Report Abuse
mohan இரு நாட்டு மக்களுக்கு பாதிப்பில்லாமல் பார்த்து கொள்ளவும்... யாருக்கு போட்டியோ அவர்கள் மட்டும் மோதி கொள்ளவும்...
Rate this:
Cancel
16-ஜூன்-202015:34:53 IST Report Abuse
ஆப்பு இரு கொரிய நாடுகளுக்கிடையே 1950 களில் நடந்த போர் இன்னும் முடிய வில்லை. அதாவது போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. இப்போது இருந்த ஒரே தொலைத் தொடர்பும் அழிக்கப்பட்டதால், வட கொரியாவுக்கு ஆப்பு நிச்சயம்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
16-ஜூன்-202015:28:44 IST Report Abuse
siriyaar China preparing its frond s for world war 3.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X