கொரோனா சிகிச்சை: ஹைட்ராக்சி குளோரோகுயினை கைவிடும் அமெரிக்கா

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

வாஷிங்டன்: மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை, கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நிறுத்தியுள்ளது.



latest tamil news




கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவத் துவங்கிய போது, 'ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து உலகின் ஆட்டத்தையே மாற்றப் போகிறது' எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா கிசிச்சைக்கு அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தினார்.
இதையடுத்து, கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் அவசர சிகிச்சைக்காக இந்த மருந்தைப் பயன்படுத்த, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் அனுமதியளித்திருந்தது. ஆனால், 'இந்த மருந்து கொரோனா சிகிச்சையின்போது எந்த பலனையும் தரவில்லை. மக்களுக்குத் தொற்று ஏற்படுவதையும் இந்த மருந்து தடுக்கவில்லை' என, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.


latest tamil news




நோயாளிகள் இறக்கும் அபாயம்


அமெரிக்காவைப் போல், பல நாடுகளும் ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்தன. ஆனால், இந்த மருந்தை கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக 'லேன்செட்' என்ற அறிவியல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மருந்து கொரோனா தொற்றை குணப்படுத்தும் என, இதுவரை எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.


latest tamil news




உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் இந்த முடிவு குறித்து அதிபர் டிரம்ப், 'கொரோனா வைரசைத் தடுக்கும் நடவடிக்கையாக முன்பு இந்த மருந்தை எடுத்துக்கொண்டேன். இந்த மருந்தை இரண்டு வாரங்கள் உட்கொண்டேன். எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. நான் இப்போதும் நன்றாக இருக்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை இந்த மருந்து காப்பாற்றியதாகப் பலரும் என்னிடம் தெரிவித்தனர்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-ஜூன்-202019:08:12 IST Report Abuse
S. Narayanan மனித உயிரின் விலை இவர்களுக்கு விளையாட்டாக இருக்கிறது.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
16-ஜூன்-202016:33:08 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பிரான்சின் ஒரு முன்னணி மருத்துவர் இது கொரோனவைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறுகிறார் எதை நம்புவது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X