'ஜொள்ளு' அதிகாரியின் 'லொள்ளு'

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement
கொரோனா குறித்த அச்சம் யாரிடமும் துளியும் இல்லை என்பதற்கு உதாரணமாக, டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. உள்ளே சென்ற சித்ராவும், மித்ராவும் முக கவசங்களை சரி செய்து கொண்டு, சேர்களில் இடைவெளி விட்டு அமர்ந்தனர்.''கூட்டம் கொஞ்சம் போகட்டும், அப்புறமா போய் வாங்கலாம்'' என சித்ரா சொன்னதை ஆமோதித்த மித்ரா, ''சிட்டியில் வடக்கு பார்த்த 'குளுகுளு'
'ஜொள்ளு' அதிகாரியின் 'லொள்ளு'

கொரோனா குறித்த அச்சம் யாரிடமும் துளியும் இல்லை என்பதற்கு உதாரணமாக, டிபார்ட்மென்ட் ஸ்டோரில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. உள்ளே சென்ற சித்ராவும், மித்ராவும் முக கவசங்களை சரி செய்து கொண்டு, சேர்களில் இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
''கூட்டம் கொஞ்சம் போகட்டும், அப்புறமா போய் வாங்கலாம்'' என சித்ரா சொன்னதை ஆமோதித்த மித்ரா, ''சிட்டியில் வடக்கு பார்த்த 'குளுகுளு' அதிகாரி ஒருத்தர், 'செம' ஜொள் பார்ட்டியாம். கம்ப்ளைன்ட் கொடுக்க வர்ற லேடீஸ், லேடி கான்ஸ்டபிள்கிட்ட வழிவாராம்,'' என, ஆரம்பித்தாள்.
''அப்படியா''
''உண்மைதாங்க்கா... இது, ஸ்டேஷனில் எல்லாத்துக்கும் நல்லா தெரியும். இருந்தும் என்ன பண்றது, அவரே தன்னை சரிபண்ணிட்டா பரவாயில்லை,''
''அக்கா... இன்னொரு அதிகாரியும் வித்தியாசமான வரு. அவருக்கும் ஸ்டேஷனுக்கு சம்பந்தமில்லைன்னாலும், சிக்கலான கம்ப்ளைன்ட் வந்ததுனா, 'கட்டப்பஞ்சாயத்து' செய்றாராம். இப்டி செஞ்சு வசூலை வாரி குவிச்சிட்டு இருக்கிறாராம்''
''இந்த ரெண்டு அதிகாரியும், 'திக்' பிரண்ட்ஸ் வேற. அதனால, எங்கே போனாலும், ஒன்னா போயிட்டு, ஓட்டலில் சாப்பிட்டு பில் கொடுக்காம வர்றது இவங்க 'ஹாபி'யாம். இப்படி பல விஷயம் நடந்தாலும், பெரிய அதிகாரி கண்டுக்க மாட்டேங்கறாரு,''
''ஆமான்டி, மித்து. அவரு கண்டிச்சாருன்னா, இவங்க கம்முனு இருப்பாங்க. இதேபோல, சிற்பங்கள் உருவாற ஸ்டேஷனில் ஒரு குட்டி அதிகாரி செம அலட்டலாம்,''
''அப்டீங்களா''
''ஆமாம். இந்த ரெண்டு அதிகாரியோட, இவரும் ரவுண்ட்ஸ் போவாராம். கேட்டா, ஸ்பெஷல் டீமுன்னு சொல்றாங்க. எப்போதும் அவங்களோடயே இருக்கறதால, ஸ்டேஷனில் யாரையும் கண்டுக்க மாட்டாராம். தானே ஒரு பெரிய ஆபீசர் கணக்கா, வலம் வர்றாராம்,''
அப்போது சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது. ''ஹாய் கார்த்திக், எப்படியிருக்க'' என ஆரம்பித்து ஒரு நிமிடம் பேசிவிட்டு போனை அணைத்தாள்.
''சித்துக்கா, கொரோனா பயமில்லா, ஜனங்க நடமாடறாங்க பார்த்தீங்களா,''
''ம்... நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன். மார்க்கெட், கடைகள், ரோடு எங்க பார்த்தாலும், ஒரே கூட்டம்தான். இப்டி இருந்தா, கொரோனாவை, வெத்தலை பாக்கு வச்சு அழைக்கிற மாதிரி இருக்கு,''
''அக்கா... மக்களுக்கு கூட அவேர்னஸ் பத்தலை. ஆனா, போலீஸ் மத்தியிலும் அப்டித்தான் போல,''
''என்னடி சொல்ற. புரியறமாதிரி சொல்லு,''
''சமீபத்தில், சென்னையிலிருந்து நாலு பேர் கமிஷனர் ஆபீசுக்கு டிரான்ஸ்பரில் வந்தாங்க. எதுக்கு பிரச்னைன்னு, அவங்க நாலு பேரின் குடும்பத்தையும், 'குவாரன்டைன்' பண்ணிட்டாங்களாம்,''
''இதிலென்ன கஷ்டம்னா, அதில ஒருத்தர், சென்னையில 'கன்டைன்மென்ட் ஜோனில்' இருந்துதான் வந்திருக்காராம். அப்டி அவசரப்பட்டு, இங்க வந்து ஜாயின் பண்ணாட்டி என்னன்னு, மத்த போலீஸ்காரங்க கேக்கறாங்களாம்,''
''எப்படியோ பாஸிட்டிவ் வராம இருந்தா நல்லதுதானே,'' என்ற சித்ரா, ''தொழில்துறையினர் வேதனைப்படறாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''ஏங்க்கா... என்ன பிரச்னை''
''கொரோனாவால், பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு, பேங்கிலிருந்து கடன் கொடுக்கறாங்க. அதில, கடன் தொகை நிலுவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கறாங்களாம்,''
''கடனை வாங்கி, ஒழுங்கா கட்டி முடிச்சவங்களுக்கு, சலுகை இல்லையாம். தொழில் நெருக்கடி எல்லாத்துக்கும்தானே. எங்களுக்கும் கடன் கொடுக்கோணும்னு சொன்னதற்கு, மாவட்ட அதிகாரி, 'சரி பார்த்துக்கலாம்'னு சொல்லிருக்காராம்,''
''அப்ப கிடைச்சிடும்,'' சொன்ன மித்ரா, ''அக்கா... மாஜிக்கு, மேயர் கனவு பலிக்காம போனதில் செம அப்செட்டாம்,'' என்றாள்.
''ஏன், அதுக்குத்தானே அவரு வார்டு புல்லா போயி ரெடி பண்ணினாரு. இப்ப என்ன ஆச்சாம்,''
''அது சரிதாங்க்கா. இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பில்லைங்கறதால, அடுத்து வர சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது 'சீட்' வாங்கிடணும்னு தீயாய் வேல செய்றாராம்,''
''இதனால, மேயர் பதவிக்கு யாருன்னு, அடுத்த விவாதம் ஆளுங்கட்சி மத்தியில ஸ்பீடா போயிட்டிருக்குதாம்,''
''இலைக்கட்சியில இப்டி... சூரிய கட்சியில அப்டி...''
''என்னக்கா, டிஆர் மாதிரி எதுகை மோனையில பேசறீங்க'' சிரித்தாள் மித்ரா.
''இல்லப்பா... காளைக்கு பேர் போன ஒன்றியத்தில் பலரும், இலைக்கட்சிக்கு தாவறாங்களாம். சில நாட்களுக்கு முன்னாடி கூட, அக்கட்சியில செல்வாக்குள்ள ஒருவர், தன்னோட ஆதரவாளர்களோட தாவிட்டாராம்,''
''என்ன பிரச்னைனு கேட்டா, மாஜி யாரையும் மதிக்கறதில்லையாம். இதனால, பலரும் தாவறாங்களாம். இப்டியே போனா கட்சி ரொம்ப வீக்காயிரும்னு, அவரோடு எதிர் கோஷ்டி தலைமைக்கு புகார் வாசிச்சாங்களாம்,''
''கட்சிக்காரருடன் பேசுவதில் கவுரவம் பார்த்தால், கட்சி எப்படி வளருங்க்கா. இதே நிலை நீடிச்சா, அமராவதி ஆத்துலதான் கட்சியை கரைக்கோணும் போல,''
''அது உண்மைதான்டி மித்து. இதேபோல, ஆளுங் கட்சியிலயும் பிரச்னை தெரியுமா,''
''என்னங்க்கா...''
''ஊரோட பேரை முன்னாடி வச்சிருக்கிற ரெண்டு வி.ஐ.பி., மத்தியில பனிப்போர் இன்னும் முடியலையாம். 'சரக்கு' கடை 'பார்' ஏலத்தில் துவங்கிய முட்டல், மோதல் இன்னும் நீடிக்குதாம்,''
''சமீபத்தில கூட, காங்கயத்தில், சூரியகட்சியினர் இணையும் விழாவை கூட, மாவட்ட வி.ஐ.பி., புறக்கணிச்சிட்டார். இதுக்கு முக்கிய காரணம், 'பார்' ஏலம்தானாம்,''
''போன வருஷம், ஏலத் தில நடந்த அடிதடிக்கு, வி.ஐ.பி.,தான் காரணம். அத மனசில வச்சிட்டு, பாலிடிக்ஸ் போகுதாம்,''
''இப்டி ரெண்டு முக்கிய கட்சியிலும், தலைவிரித்தாடும் கோஷ்டி பூசலில்சிக்கி, தொண்டர்களின் பாடு திண்டாட்டம்தான்,'' சொன்ன மித்ரா, ''டைம் ஆயிடுச்சு, வாங்க போலாம்,'' என்றாள். இருவரும், பொருள் வாங்க உள்ளே சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X