பொது செய்தி

இந்தியா

ம.பி.,யில் மோடி மாஸ்க்கிற்கு மவுசு!

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவங்கள் கொண்ட முகக்கவசங்கள் வியாபாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. அதிலும் மோடி உருவ முகக்கவசங்களுக்கு அதிக தேவை உள்ளது என்கின்றனர்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை தற்போது 11,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 465 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஊரடங்கு
Modi, Mask, MP, pm modi, Corona Mask, corona, coronavirus, covid-19, face mask, bhopal, பிரதமர், மோடி, மாஸ்க், முகக்கவசம், மபி

போபால்: மத்திய பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவங்கள் கொண்ட முகக்கவசங்கள் வியாபாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. அதிலும் மோடி உருவ முகக்கவசங்களுக்கு அதிக தேவை உள்ளது என்கின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை தற்போது 11,000 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 465 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வங்கிகள் மற்றும் நகைக் கடைகளுக்கு வருபவர்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவாக 30 விநாடிகள் முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என மாநில காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


latest tamil news


உத்தரகண்ட், கேரளா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் தலைவர்களின் உருவம் கொண்ட முகக்கவசங்கள் பிரபலமாகியுள்ளது. குறிப்பாக மோடி உருவ முகக்கவசங்களை பலரும் விரும்பி அணிகின்றனர். அவற்றிற்கு தேவை அதிகரித்துள்ளதாக கார்மென்ட்ஸ் தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி காங்கிரஸ் எம்.பி., ராகுல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆகியோரின் உருவ முகக்கவசங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202020:36:37 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி கொரோனா பின் பக்கமாகவும் வருகிறதாம். வெறி கிரேசி இண்டியன்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-202018:11:43 IST Report Abuse
SAPERE AUDE வைத்தியர்களுடன் ஆலோசித்து முக கவசம் எப்படி இருக்கவேண்டும் என்ற வழிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். நமது நாட்டில் எல்லாத் துறையிலும் அரசியல் நுழைந்து விடுவது துரதிர்ஷ்டமே.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
16-ஜூன்-202016:27:55 IST Report Abuse
Loganathaiyyan மாஸ்க்கில் உங்கள் போட்டோவை பகிர்ந்தார்கள் பிசினெஸ் கொஞ்சம் டல் ஆயிடுச்சி இப்போ இதன் மூலம் பிசினெஸ்ஸை கொஞ்சம் விருத்தி செய்திருக்கின்றார்கள். இது ஒரு வியாபார உத்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X