கொரோனாவை மறந்து தேர்தலில் கவனம்: டிரம்ப் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தெல்லாம் கவலைப்படுவதாய் தெரியவில்லை. நவம்பர் மாதம் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கான கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார் என அமெரிக்க எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது ஜார்ஜ் புளாயிட் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா
Trump, President Election, Pandemic, CoronaVirus, Contradicts, Reality, corona, US , Donald Trump, america, opposition, politics, coronavirus outbreak, covid-19 pandemic, டிரம்ப், அமெரிக்கா, அதிபர், தேர்தல், கொரோனா, வைரஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தெல்லாம் கவலைப்படுவதாய் தெரியவில்லை. நவம்பர் மாதம் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கான கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார் என அமெரிக்க எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது ஜார்ஜ் புளாயிட் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா தாக்கம் அமெரிக்காவில் குறையாமல் அதிகரித்து வருகிறது.


latest tamil news


ஓக்லஹோமா மாநிலத்தில் வரும் சனியன்று பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான குடியரசுக் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குகொள்ள உள்ளனர். மேலும் பிரம்மாண்ட ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவேளை விட்டு ஊர்வலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் கொரோனா விதிகள் கச்சிதமாகப் பின்பற்றப்படுமா என்பது கேள்விக்குறிதான். கொரோனாவை வைத்து பிடேனும் ஜனநாயக கட்சியும் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக டிரம்ப் மற்றும் மைக் பாம்பியோ ஆகியோர் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.


latest tamil news


இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெடிக்ஸ் மற்றும் எவால்யுவேஷன் ஆஃப் யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன் ஆய்வின்படி வரும் அக்., 1ம் தேதிவரை 2 பேர் கொரோனாவால் மரணம் அடைவர் என எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. தினமும் அமெரிக்காவில் இறப்போரது எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் அமெரிக்க தேர்தல் நடத்தப்பட்டால் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
16-ஜூன்-202016:57:17 IST Report Abuse
Abbavi Tamilan இங்க மட்டும் என்ன வழுதாம், பீகார் தேர்தலுக்கு தாயாராகி கொண்டு இருக்கவில்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X