பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு: பிரதமர் மோடி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
PM Narendra Modi, pm modi, covid 19, coronavirus, coronavirus india, coronavirus pandemic, coronavirus outbreak, covid-19 death, covid-19 pandemic, coornavirus spread in india new coronavirus cases, corona patients, prime minister, narendra modi, modi, discussion, chief ministers, covid-19 mortality rate, முதல்வர்கள் - பிரதமர்  ஆலோசனை

புதுடில்லி: மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை 50 சதவீதமாக ஆக உள்ளதாகவும், இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


ஆலோசனை


நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, இன்று(ஜூன் 16) 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர்.

தமிழகம், மஹா., மே.வங்கம், டில்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார். முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது 6வது முறையாகும்.


latest tamil news

பயனளிக்கும்


இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த இரண்டு வாரங்களில் நமக்கு கிடைத்த அனுபவம், எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கள நிலவரத்தை இன்று உங்களிடம் இருந்து தெரிந்து கொள்வேன். உங்களின் ஆலோசனை, எதிர்காலத்தில் திட்டங்களை வகுப்பதற்கு பயனளிக்கும்.


சரியான நேரத்தில் முடிவு


கடந்த சில வாரங்களில் ஆயிரகணக்கான இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர். அனைத்து வகையான போக்குவரத்தும் துவங்கிய நிலையில், உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. குணமடைவோர் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கொரோனாவால், இந்தியாவில் உயிரிழப்பு விகிதமும் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கொரோனாவை கட்டுப்படுத்த உதவியது.


முக்கியமானது

தற்போதைய நிலையில் வெளியே வரும் போது மாஸ்க் அணியாமல் வருவது சரியாக இருக்காது. கைகளை கழுவதும், சானிடைசர்களை பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம். மார்க்கெட்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியே வர துவங்கியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியம்.


வளர்ச்சி பெறும்


விவசாய பொருட்களின் விற்பனையில் சீர்திருத்தங்கள் செய்திருப்பதால், வேளாண் துறை வளர்ச்சி பெறும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுகுறு தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருந்தது.வர்த்தகம் மீண்டும் வேகம் அடைய நாம் அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடன் - bombay,இந்தியா
16-ஜூன்-202019:39:18 IST Report Abuse
திராவிடன் மோடியின் வழக்கமான பொய் பேச்சுகள்...
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-202017:58:27 IST Report Abuse
Janarthanan நம்ம நாட்டின் மக்கள் தொகை 130 கோடி ,லோக்கடவுன் தாமதாக அறிவித்த நாடுகளில் பாதிப்பு சதவீதம் 0.5% இறப்பு சதவீதம் 0.05% இருக்கிறது , இதன் பிரகாரம் இந்தியாவில் வெகு குறுகிய காலத்தில் 65 லட்சம் பேர் வரை பாதிப்பு 6.5 லட்சம் இறந்து இருப்பார்கள் health செக்டர் மீது பெரிய சுமை வந்து இருக்கும் ,இப்பொழுது exponential growth இல்லை, ரெகவரி ரேட் 51% கிட்ட வந்து விட்டது அதுவே வெற்றி தான், மக்கள் விழிப்புடன் இருந்தால் அரசின் அறிவுரைகளை பின் பற்றினால் மேலும் வெற்றி அடையாலம்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூன்-202017:50:02 IST Report Abuse
Janarthanan ஒன்றை புரிந்து கொள்ளுவோம் கொரோனா ஒரு தொற்று வியாதி, மருந்தும் முறையான treatment எதுவும் இல்லை ஒவ்வரு நோயாளி ஒவ்வரு வகையாக தான் treatment கொடுக்க படுகிறது ,ஏற்ற கொள்ளாதவர்கள் இறந்து விடுகிறார்கள் ,இதற்க்கு தடுப்பு ஊசி இருந்தால் அதை அரசு போட்டு தடுத்து விடலாம் ??? ஆனால் தற்போது இருக்கும் ஒரே தடுப்பு சமூக இடைவெளி ,முகக்கவசம் , கையை கழுவது, நோய இருந்தால் வீட்டில் இருப்பது தான் இது அரசு வந்து செய்ய முடியாது நீங்க தான் விழித்து கொள்ள வேண்டும் ??? அரசால் முடிந்தது பொது போக்குவரத்தை ,பொது இடங்களை மூடி வைத்து உள்ளார்கள் , நீங்கள் தனியாக சுற்றி திரியும் காரணங்கள் நீங்கள் விழிப்புணர்வுடன் /பொறுப்புடன் இருக்க வேண்டும் ....இங்கு நான் வாழும் நாட்டில் எல்லா இடத்திலும் நோய் பரவாமல் இருக்க "ALL ARE RESPONSIBLE" ஒட்டி உள்ளார்கள் ??? அரசு மட்டுமே பொறுப்பு என்று நம் பொறுப்பை தட்டி கழிப்பது தவறு ??? குடுமப அடிமைகள் இதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X