குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது: ராகுல்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
Rahul, Gujarat Model, Mortality Rate, Congress, BJP, politics, opposition, mortality rate, COVID-19 patients,  Maharashtra, Tamil Nadu, Congress leader, coornavirus crisis, covid-19 patients, covid-19 death, india, ராகுல், காங்கிரஸ், குஜராத் மாடல், அம்பலாகிவிட்டது, கொரோனா, வைரஸ், உயிரிழப்பு, விகிதம்

புதுடில்லி: நாட்டிலேயே கொரோனா தொற்று உயிரிழப்பு விகிதம் அதிகம் கொண்ட மாநிலமாக குஜராத் இருப்பதை அடுத்து, ‛குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது' என காங்., எம்.பி., ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக மஹாராஷ்டிரா திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, தமிழகம், டில்லி, குஜராத் மாநிலங்கள் உள்ளன. ஆனால் உயிரிழப்பு விகிதங்களை பொறுத்தவரையில் குஜராத் முன்னிலையில் உள்ளது. இதனை குறிப்பிட்டு காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‛கொரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம்: குஜராத் - 6.25 சதவீதம், மஹாராஷ்டிரா - 3.73 சதவீதம், ராஜஸ்தான் - 2.32 சதவீதம், பஞ்சாப் - 2.17 சதவீதம், புதுச்சேரி - 1.98 சதவீதம், ஜார்க்கண்ட் - 0.5 சதவீதம், சத்தீஸ்கர் - 0.35 சதவீதம். குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது,' எனப் பதிவிட்டுள்ளார்.



latest tamil news


அதாவது, பாஜ., ஆளும் மாநிலங்களை விட, காங்., தலைமையிலான அரசு மற்றும் காங்., ஆதரவில் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் கொரோனா வைரசை கையாள்வது சிறப்பாக இருப்பதாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் ராகுல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
19-ஜூன்-202000:12:51 IST Report Abuse
Vetri Vel கேக்குற கேள்விக்கு எவனாவது பதில் சொல்றானா னு பாரு... வரிந்து கட்டி மோசடி கும்பல் கேள்வி கேட்பவனை வசை பாடுது..
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
17-ஜூன்-202013:08:37 IST Report Abuse
madhavan rajan குஜராத் எப்படி பார்த்தாலும் காங்கிரஸ் தாங்கும் மகாராஷ்டிராவை தாண்ட முடியாது. அதிகமான ஆட்களை மஹாராஷ்டிராவில் சாக விட்டுவிட்டு பத்து லட்சத்துக்கு எத்தனை பேர் என்பதில் குஜராத் முந்தி விட்டது என்பதை காட்டுகிறார். இவர் கூற்றுப்படி பார்த்தால் உலக அளவில் மிகவும் குறைந்த சதவிகித மரணம் உடைய இந்திய அரசின் நடவடிக்கையை பாராட்டவேண்டும். இவர் செய்வாரா?
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-202007:19:21 IST Report Abuse
SAPERE AUDE குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. இந்த கேரளத்து MP, வெத்து அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு மக்களுக்கு ஏதாவது உருப்படியாக உதவிசெய்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X