பொது செய்தி

இந்தியா

14,000 அடி உயரத்தில் நடந்த மோதல்: 10 முக்கிய அம்சங்கள்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
5 Chinese,China, india, army,  soldiers, indian army, ladakh, Indian, Chinese troops, galwan valley, soldiers, chinese military, neighbouring country, dispute,

புதுடில்லி: இந்திய எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சீன ராணுவ வீரர்கள் உடனான மோதலில் ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14, 000 அடி உயரத்தில் , அணு ஆயுத பலமிக்க இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள், கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சீன ராணுவம், தங்களது தரப்பு இழப்புகள் குறித்த விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

கடந்த சில வாரங்களாக பதற்றம் நீடித்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பில், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்றிரவு நடந்த மோதலை அடுத்து கயிற்றில் இருந்து நழுவுவது போன்று விளிம்பில் உள்ளது. கடந்த சில வாரங்களாகவே, கல்வான் பள்ளதாக்கில் சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பான 10 முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.


latest tamil news1. இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரி, கல்வான் பள்ளத்தாக்கில் கமாண்டிங் அதிகாரியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. கடைசியாக 45 ஆண்டுகளுக்கு முன் அருணாச்சலின் துங் லாவில் , 1975ம் ஆண்டு சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், 4 அசாம் ரைபிள் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

3. கல்வான் பள்ளத்தாக்கில் பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், மோதல் நடந்துள்ளது. இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனே, 'இருதரப்பும் படிப்படியாக கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்க துவங்கியுள்ளோம். நாங்கள் வடக்கிலிருந்து துவங்கியுள்ளோம். கால்வான் ஆற்றின் பகுதியிலிருந்து நிறைய படைகள் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது' என கூறியிருந்தார்.

4. இருதரப்பு மோதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, கற்கள் மற்றும் கைகளால் மோதி கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன. சீன ராணுவ வீரர்களின் கற்களை வீசி நடத்திய தாக்குதலில் நம் ராணுவ வீரர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

5. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி போன்ற இடங்களில் இரு நாட்டு ராணுவங்களும் படைகளை குவித்தன. சமீபத்திய எல்லை மோதலுக்கு, இந்தியாவுக்கு சொந்தமான பாங்கோங் த்சோ ஏரி உள்ளிட்ட இடங்களில், சீன ராணுவ வீரர்கள் எல்லையை மீறி நுழைந்ததே காரணமாக கூறப்படுகிறது. மேலும் எல்லையோரம் ரோந்து பணிகளை மேற்கொள்ள இந்தியா அமைத்து வரும் சாலை பணிகளுக்கு எதிராக சீனா சீண்டுவதாக கூறப்படுகிறது.

6. கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் 4 இடங்களில் எல்லையை மீறியதும், படைகளை குவித்ததில் இருந்து பதற்றம் துவங்கியது. மே மாத துவக்கத்தில், கிழக்கு லடாக் ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சீனா கனரக வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் 6 ஆயிரம் வீரர்களுடன் படையை அதிகரிக்க துவங்கியுள்ளது.

7. லடாக்கில் தற்போதைய ராணுவ வீரர்கள் குவிப்பு , முந்தைய டெப்சாங் மற்றும் சுமார் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டதாகும். இது ரோந்து பணியின் போது ஏற்பட்ட மோதல் அல்ல. பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக , சீன தரப்பு நன்கு திட்டமிட்டு நடத்தும் நடவடிக்கையாகும்.

8. சீனா எல்லை கட்டுப்பாடு கோடு ஒட்டிய பகுதியில் பல்வேறு பகுதிகளில் பீரங்கிகள், ராணுவ உபகரணங்களுடன் படைகளை அதிகரித்தது. கனரக வாகனங்கள், ஹெலிகாப்டர் மற்றும் பீரங்கிகளை அதிகளவில் குவித்தது.

9. இந்தியாவும் குறிப்பிட்ட நோக்கத்துடன் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீன படைகளின் அளவுக்கு இந்தியாவும் அதே அளவுக்கு வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை குவித்தது. சீனாவின் எதிர்ப்பு காரணமாக எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களையும் நிறுத்த வேண்டாமென இந்தியா முடிவு செய்துள்ளது. 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை தொடர்பான பல பிரச்னைகள் இருக்கின்றன.

10. தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராணுவ உயர் மட்ட அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என தெரிகிறது. சீனா படைகளை பின்வாங்க விரும்பவில்லை என தோன்றினாலும் ,தொடர்ந்து முட்டுக்கட்டை இருக்க வாய்ப்புக்கள் உள்ளது. சீன அரசின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ், இந்திய வீரர்கள் , எல்லையை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியதால் தான், மோதல் ஏற்பட்டதாக அபாண்டமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
17-ஜூன்-202008:25:51 IST Report Abuse
Muguntharajan ஐ நா சபை ஏன் இன்னும் இந்த பிரச்சனை யில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. உடனே தலையிட வேண்டும். சீனாவை எச்சரிக்கை செய்ய வேண்டும். கற்கள் கட்டைகள் முதல் அணுகுண்டு வரை எந்த ஆயுதத்தையும் எந்த நாட்டு ராணுவமும் இனிமேல் பயன்படுத்தக் கூடாது என ஐநா கட்டளையிட வேண்டும்.
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202022:06:54 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga கொரனவை உற்பத்தி செய்து உலகெங்கும் பரப்பிவிட்டு உலக பொருளாதாரத்தையே உருக்குலைய செய்துவிட்ட சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும். தற்போது இதிலிருந்து திசை திருப்பவே இந்தியாவின் மீது படையெடுத்து ஆகிரமிப்பு செய்கிறது. இதை எல்லா நாடுகளும் கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel
16-ஜூன்-202020:13:11 IST Report Abuse
நக்கல் இதை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கவனிக்கவேண்டும்.. சீனா உலகை ஆள துடிக்கிறது... இவர்களை அடக்க வில்லை என்றால் ஆசியாவில் ஆரமித்து கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கண்டங்களை ஆக்கிரமிப்பார்கள்.. இந்த நேரத்தில் பக்கிகள் வாலாட்ட தொடங்குவார்கள்... எல்லா ஒத்த கருத்துள்ள நாடுகளும் சீனாவை எதிர்க்கவேண்டும்... அமெரிக்கா வளரவிட்ட இஸ்லாமிய தீவிரவாதம், சீன டிராகன் இரண்டையும் அவர்கள்தான் அடக்கவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X