பொது செய்தி

இந்தியா

பொருளாதாரத்தை சரி செய்ய பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்: நிதின் கட்காரி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Nitin Gadkari, Liquidity, Economy, Market, indian economy, union minister, MSME,Infrastructure, coronavirus crisis, india, coronavirus outbreak, நிதின் கட்காரி, பணப்புழக்கம், பொருளாதாரம்

புதுடில்லி: பணப் புழக்கத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவி, பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த தொற்றால் மனிதர்கள் மட்டுமல்ல, உலக பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் உலகமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டதால் பொருளாதாரம் முடங்கியது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்காவும், கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவில் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது.


latest tamil news


இந்நிலையில், பொருளாதாரம் மீட்பது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: வங்கிகள் தொடர்பான பிரச்சினைகளை ஏற்கிறேன். பொருளாதாரத்தில் தேவை மற்றும் விநியோகத்திற்கு பணப் புழக்கம் மிக முக்கிய பங்காற்றுகிறது. தற்போதைய பொருளாதார சூழலில் பணப் புழக்கத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு கடன் கிடைக்க வேண்டும். இதனை செய்யாமல் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
18-ஜூன்-202005:37:43 IST Report Abuse
NicoleThomson இவர் எந்த துறைக்கு அமைச்சர்?
Rate this:
Cancel
VCK ALI BHAI - CHENNAI,இந்தியா
16-ஜூன்-202022:24:24 IST Report Abuse
VCK ALI BHAI பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பது சிறு குழந்தைக்கும் கூட தெரியும் .
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
16-ஜூன்-202022:01:30 IST Report Abuse
J.Isaac அதிகமான மூல பொருட்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன . இப்பொழுது உள்ள சூழலில் கடன் வாங்குவது பெரிய ஆபத்து. வட்டி வட்டி வசூல் பண்ணுவார்கள். பெட்ரோல் விலை மட்டும் தினமும் ஏறி கொண்டே இருக்கிறது. அரசு முக்கிய குறிக்கோள் வரி வசூல் பண்ணுவது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X