சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மோடி தயங்குவது ஏன்?: காங்., கேள்வி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: லடாக் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்திய எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சீன ராணுவ வீரர்கள் உடனான மோதலில் ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 ஆயிரம் அடி உயரத்தில், அணு ஆயுத பலமிக்க இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள், கற்கள் மற்றும் கட்டைகளை
Kapil Sibal, Modi, China, Red Eye, Ladakh, Congress,  PM Modi, Prime Minister, Narendra Modi, Indian and Chinese soldiers, Senior Congress leader, Prime Minister, Indian Territory, கபில்சிபல், மோடி, பிரதமர், சீனா, எதிர்ப்பு, லடாக், காங்கிரஸ்

புதுடில்லி: லடாக் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சீன ராணுவ வீரர்கள் உடனான மோதலில் ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 ஆயிரம் அடி உயரத்தில், அணு ஆயுத பலமிக்க இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள், கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.


latest tamil news


இது குறித்து காங்., மூத்த தலைவர் கபில் சிபல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லடாக் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார்?. மோடி இரட்டை முகம் கொண்ட அரசியல் செய்கிறார். சீனப் படைகள் எல்லையைக் கடக்கும்போதே பிரதமர் ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
18-ஜூன்-202010:53:08 IST Report Abuse
K.Muthuraj சீனா பிரம்மாண்டமாக உற்பத்தி உள்கட்டுமானத்தினை ஏற்படுத்திக் கொண்டிருந்தபொழுது நம் மக்களை அதற்கு மாற்றாக தயார்படுத்தாமல் ஏமாற்றியவர்கள். விளைவு சீனா பொருட்களின் இந்தியா இறக்குமதி. இப்பொழுது சீனா விண்ணளவு முன்னேற்றம் கண்டுவிட்டது. இந்தியர்கள் இன்னமும் வல்லரசு கற்பனையிலேயே உள்ளனர். இதற்கு முழு காரணம் கபில் சிபல் மன்மோகன் திருமதி சோனியா மற்றும் சிதம்பரம் போன்றவர்கள். எல்லா மாநிலங்களுக்கும் சுயாட்சி என்ற கோஷத்தில் அனைவரையும் மனம்போன போக்கில் செயல்பட வைத்தவர்கள். அதனால் உற்பத்தித்துறையில் வீழ்ச்சி. ஆனால் இவர்களில் பிரணாப் சற்றே மனசாட்சி உள்ளவர். எனவே அவரை ஓரங்கட்டி ஜனாதிபதி ஆக்கி விட்டார்கள்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
17-ஜூன்-202015:02:59 IST Report Abuse
sankar வாரும் மிஸ்டர் ஸீரோ
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-202006:46:24 IST Report Abuse
SAPERE AUDE இவர்களுக்கு வேறு வேலையே இல்லாததினால் கொம்பு சீவுவதும், குடுமி முடிவதலும் தான் வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X