பொது செய்தி

இந்தியா

துப்பாக்கியா? கைகலப்பா?: இரு நாட்டு வீரர்கள் பலியானது எப்படி?

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த மோதலில் சீன வீரர்கள் சுட்டதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தற்போது, துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் உயிரிழக்கவில்லை. இரு தரப்புக்கு இடையே நடந்த கை கலப்பில் தான் அவர்கள் உயிரிழந்தனர். இந்த கைகலப்பின் போது கற்கள், இரும்பு பொருட்களை கொண்டு சீன வீரர்கள் தாக்கியதாக தகவல்கள்
துப்பாக்கி, கைகலப்பு, வீரர்கள், இந்தியா, சீனா, பலி, china, india, border, east ladakh, Chinese soldiers, Indian soldiers, violent face-off,Indian army, Indian soldiers killed, Indian government

புதுடில்லி: இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த மோதலில் சீன வீரர்கள் சுட்டதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தற்போது, துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் உயிரிழக்கவில்லை.
இரு தரப்புக்கு இடையே நடந்த கை கலப்பில் தான் அவர்கள் உயிரிழந்தனர். இந்த கைகலப்பின் போது கற்கள், இரும்பு பொருட்களை கொண்டு சீன வீரர்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லையில், கடந்த சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்தை குறைக்க இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய பபகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறியது. அவர்களை இந்திய வீரர்கள் திருப்பி அனுப்பினர்.
சீன வீரர்கள் திருப்பி செல்லும் போது வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, ஒரு ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் சீன வீரர்கள் சுட்டதில் தான் இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சீன தரப்பிலும் 5 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


latest tamil news


தற்போது, சீன வீரர்கள் திருப்பிசெல்லும் போது கைகலப்பில் ஈடுபட்டு வன்முறைறையை ஏற்படுத்தினர். அப்போது, கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தரப்பில் 3 பேர் வீரமரணம் அடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-202023:45:16 IST Report Abuse
Ramesh R இஸ்ரேல் வழி பின் பற்ற வேண்டும்
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
18-ஜூன்-202009:41:11 IST Report Abuse
Amirthalingam Shanmugam சப்பை மூக்குக்காரன்கள் முதுகில் குத்துவதில் கில்லாடிகள் .இஸ்ரேலிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வது நல்லது.வீணாப்போன சீனப்பொருட்களை முற்றிலும் தவிர்ப்பதே அவனுக்கு கொடுக்கும் முதல் மரண அடியாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
18-ஜூன்-202006:15:17 IST Report Abuse
Indhuindian கற்களால் தாக்குதலா - அப்படீன்னா மேட் இன் பாக்கிஸ்தான் - தொழில்நுட்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X