பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 48,019: பலி 528 ஆக உயர்வு

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 16) ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆகவும், பலி எண்ணிக்கை 528 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 61 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 48,019 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 19,242 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,48,244 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


இன்றைய உயிரிழப்புகளில் 35 பேர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
17-ஜூன்-202016:06:29 IST Report Abuse
svs ஒரே நாளில் 49 பேர் இறப்பு ....மொத்த பலி எண்ணிக்கை 528 .....இது அறிவித்தது ..சென்னை மாநகட்சி அறிவிக்காதது எவ்வளவோ ....ஊழல் மந்திரி மற்றும் மாநராட்சி கமிஷனர் .....கேரளாவும் , பெங்களூரும் என்ன முயற்சி செய்தாலும் சென்னையை மிஞ்ச முடியாது ....இங்கு திராவிட படிப்பறிவு மற்றும் பகுத்தறிவு தமிழ் நாட்டில் சென்னயில் மிக அதிகமாக வளர்ந்துவிட்டது ...இது பெரியார் மண் ....
Rate this:
Cancel
krishnaraj - bangalore,இந்தியா
17-ஜூன்-202011:58:43 IST Report Abuse
krishnaraj Cheap Politics, Bias, Vested Interests
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
17-ஜூன்-202007:40:51 IST Report Abuse
G.Prabakaran ஒவ்வொரு நாளும் மாவட்ட வாரியாக எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகிறது எனும் தகவல் இல்லாததால் இவர்கள் கொடுக்கும் எண்ணிக்கை மீண்டும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X