வங்கிக்கு சென்ற பெண்ணை காவு வாங்கிய கண்ணாடி கதவு| Kerala woman crashes into glass door at bank, dies | Dinamalar

வங்கிக்கு சென்ற பெண்ணை காவு வாங்கிய கண்ணாடி கதவு

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (19)
Share
எர்ணாகுளம் : கேரளாவில் வங்கி ஒன்றில் மூடியிருந்த கண்ணாடி கதவை கவனிக்காமல் கதவில் மோதிய பெண் கண்ணாடி உடைந்ததில் காயமடைந்து பலியானார்.கேரள மாநிலம் எர்ணாகுளம் பெரும்பாலூரைச் சேர்ந்தவர் பீனா பவுல், 40 அங்குள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றார். வங்கிக்கு உள்ளே சென்ற அவர், தாம் மறந்து வைத்துவிட்டு வந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுப்பதற்காக மீண்டும் வேகமாக வெளியே
  Kerala Woman, Crashes, Glass Door, Bank, Dies, Accident On CCTV, kerala, ernakulam, perumbavoor,  CCTV, Beena Paul, C Jayakumar, police officer, CCTV visuals, internal injuries, glass piece pierced into her abdomen,


எர்ணாகுளம் : கேரளாவில் வங்கி ஒன்றில் மூடியிருந்த கண்ணாடி கதவை கவனிக்காமல் கதவில் மோதிய பெண் கண்ணாடி உடைந்ததில் காயமடைந்து பலியானார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பெரும்பாலூரைச் சேர்ந்தவர் பீனா பவுல், 40 அங்குள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றார். வங்கிக்கு உள்ளே சென்ற அவர், தாம் மறந்து வைத்துவிட்டு வந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுப்பதற்காக மீண்டும் வேகமாக வெளியே சென்றார். அப்போது வாசலில் தானியங்கி கண்ணாடி கதவு மூடி இருப்பது தெரியாமல், கதவில் மோதி கீழ விழுந்தார். அப்போது கண்ணாடி உடைந்து கண்ணாடி துண்டுகள்அவரது வயிற்றிலும், தலையிலும் பாய்ந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கேயே நிலைகுலைந்து கீழ விழுந்தார். விழுந்துவிட்டார். இந்த சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


latest tamil news
10 நிமிடத்தில் பீனா மயக்கம் அடைந்த நிலையில் ரத்தம் வடிந்து உயிருக்கு போராடிய அவரை, வங்கிக்கு வந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணாடி கதவு மெல்லிதாக இருந்துள்ளதால் மோதிய வேகத்தில் கண்ணாடி உடைந்து பெண் வயிற்றையும், தலையையும் பதம் பார்த்துள்ளது. மிகவும் தடிமான இருந்திருந்தால் இப்படிஒரு சம்பவம் நிகழ்ந்திருக்காது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X