பொது செய்தி

இந்தியா

நம் பலவீனத்தின் அறிகுறியே சீனாவின் போர்க்குணத்தை காட்டுகிறது ; பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

சண்டிகர் : லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்கள் பாதிப்பு குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர், நாட்டின் பலவீனத்தின் அறிகுறிகளை காட்ட, சீனா அதன் போர்க்குணத்தை காட்டுகிறது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



latest tamil news



லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சீனா - இந்தியா ராணுவத்தினர் இடையேயான மோதலில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவின் ஊடுருவல் தொடர்பாக இன்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறுகையில், இந்தியா - சீனா இடையே நீண்ட கால போர் இருந்தாலும் இந்தியா எப்போதும் அத்துமீறல் செய்ததில்லை. நமது வீரர்கள் நியாயமான முறையில் மட்டுமே போராடி பாதுகாப்பை நிலைநிறுத்துகின்றனர். ஆனால் சீன ராணுவமோ அத்துமீறி நமது நிலப்பகுதி (எல்லை) பகுதிகளுக்குள் ட்ரோன்களை அனுப்பி கண்காணிப்பது, திடீர் தாக்குதல் நடத்துவது, ஏவுகணை செலுத்துவது போன்ற பல்வேறு தேவையற்ற செயல்களில் ஈடுபடுகிறது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஊடுருவலால் நமது வீரர்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக இந்திய அரசு எழுந்து நின்று எதிர்க்க வேண்டிய தருணமாகும். இந்த கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.


latest tamil news



எல்லையில் பதற்றத்தை தணிப்பது முக்கிம்தான். ஆனால் நம் எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்கள், ராணுவ அதிகாரிகள் கொல்லப்படுவது நியாயம் கிடையாது. இதற்கு மோடி தலைமையிலான அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா போருக்கு ஆதரவாக இல்லை. மாறாக அதை விரும்பவும் இல்லை. நமது பலவீனத்தை காட்டும் ஒவ்வொரு அறிகுறியும், சீனாவின் போர்க்குணத்தை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்க செய்கிறது.


latest tamil news



சீனர்களின் தேவையில்லாத , நியாயமில்லாத ஊடுருவல்களில் இருந்து தடுக்க ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். வீரர்களின் மீதான தாக்குதல்களுக்கு சீன அரசு பதில் சொல்லியே தீர வேண்டும். சீன நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் திசை மீறுவதாகவும், இந்திய ஒருமைப் பாட்டிற்கு எதிரான ஒரு வெட்கக்கேடான தாக்குதலாகவும் இருந்தன.


latest tamil news



எந்தவொரு நிலையிலும் இந்தியா தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யாது. உள்நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் வெளிப்புற சவால்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதாகவும் அவர்கள் எச்சரிக்கப்படட்டும். வீரமரணம் எய்திய நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தேசத்துடன் நானும் இணைகிறேன். உங்கள் துயரத்தில் நாடு உங்களுடன் நிற்கிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூன்-202018:07:19 IST Report Abuse
madhavan rajan இது எதோ மன்மோகன் மற்றும் சோனியாவுக்கு சொல்றமாதிரி இருக்கே. ஏதாவது உள்குத்து இருக்குமோ?
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-202000:34:41 IST Report Abuse
Dr.C.S.Rangarajan இந்தியா தேர்தல் ஆணையம் தன் கண்காணிப்பில் நடத்தி அதன் வாயிலாக மாநில சட்ட மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்க பட்ட அங்கத்தினர்களும், அவர்களாற் தேர்ந்தெடுக்கப்படும் முதல் அமைச்சர்களும் நாணயமானவர்களாகவும், தங்கள் நலத்தைவிட மக்களின் நல 'பாதுகாவலர்கள்' என மக்கள் நம்பினால், அது மக்களின் பலவீனத்தின் வெளிப்பாடா? தெய்வத்தை நம்புகிறோம், நாம் நம்பாத பொருளில்லை அவனியிலே, இவை யாவும் நம் பலவீனத்தையா பிரதிபலிக்கின்றன? வாக்கினிலே இனிமை, வரும், ஆனால் வராது மனதில் உறுதி இல்லாதவர்கள் இடமிருந்து.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-ஜூன்-202019:13:03 IST Report Abuse
A.George Alphonse பஞ்சாபியர்கள் எப்போதுமே மிகுந்த தேச பக்தியும்,தேச பற்றும் கொண்ட வர்கள்.நாட்டுக்காக உயிரையே தவறாமல் அர்ப்பணிக்கும் வீரர்கள்.முப்படைகளிலும் இவர்கள் பங்களிப்புதான் அதிகம் காணப்படும். இவரின் தேசபக்தியைகண்டு தலைவணங்கி சலூட் அடிக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X