பொது செய்தி

இந்தியா

36 கிரகங்களில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பு!

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: பூமியைப் போன்று வேறுகிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் நமது பூமியில் இருப்பதைப் போல அறிவுமிக்க உயிர்கள் 36 வேறு கிரகங்களில் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.



latest tamil news



அதே நேரம் இவர்கள் எந்த கிரகங்களில் வாழ்கிறார்கள், அவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு என்ற கேள்விகளுக்கு இன்றளவும் விடை இல்லை. இந்நிலையில் நாட்டிங்ஹாம் பல்கலை விஞ்ஞானிகள் சிலர் அண்ட பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இந்த 36 ஏலியன் சமுதாயங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.


latest tamil news



'The Astrophysical Journal' என்ற வானியல் இதழில் இவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் விண்மீன் உருவாகுதல், அவற்றின் கனிமலோக அமைப்பு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில், மற்ற பால்வெளிகளில் பூமியைப் போன்று கோள்கள் பல இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
20-ஜூன்-202018:54:41 IST Report Abuse
A P இன்று இவர்கள் சொல்வதற்கும் மேல, நமது ஸனாதன மதத்தின் வரலாறுகளில், இவற்றைப்பற்றி பலப்பல தகவல்கள் உள்ளன. பல கையேடுகளை, முகமதிய மற்றும் கிரித்தவ படையெடுப்பாளர்கள் திருடிச் சென்றதோடல்லாமல், பல கையேடுகளை கொளுத்தி நாஸம் செய்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக வலைதளங்களில் உறுதி செய்யப்பட்ட செய்திகள் காணக் கிடைக்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X