பொது செய்தி

இந்தியா

சவாலான நேரத்தில் நாட்டை வழிநடத்தும் பிரதமருக்கு, முதல்வர்கள் நன்றி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
PM, Modi, Prime Minister, Narendra Modi, PM odi, chief minister, thanks, coronavirus, coronavirus outbreak, covid-19 pandemic, corona crisis, india, india fights corona, CMs, மோடி, PMs Office, meeting, conference, corona virus, covid 19

புதுடில்லி: முதல்வர்களுடனான இன்றைய ஆலோசனை கூட்டத்தில், சவாலான நேரத்தில் நாட்டை வழிநடத்துவதற்காக, பிரதமர் மோடிக்கு முதல்வர்கள் நன்றி தெரிவித்ததாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இதன்படி இன்று பகலில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் குணமடைவோர் எண்ணிக்கை 50 சதவீதமாக ஆக உள்ளதாகவும், இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில், கூட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவும் இதுபோன்ற சவாலான நேரத்தில், பிரதமரின் தலைமைக்கும், வைரசுக்கு எதிராக போராட மாநிலங்களை ஒன்றிணைத்ததற்கும், பிரதமருக்கு முதல்வர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள், தங்கள் மாநிலங்களில் தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் வைரசின் தாக்கத்தை சமாளிப்பதற்கான வளர்ச்சிக்கான முயற்சிகள் குறித்தும் கருத்துக்களை வழங்கினர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹா., மேற்கு வங்கம், டில்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ratchanyam - Chennai,இந்தியா
17-ஜூன்-202003:06:14 IST Report Abuse
Ratchanyam He thanks others, but did nothing. He didn't even give the share of Tamil Nadu.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-202022:16:25 IST Report Abuse
தல புராணம் //இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.// பரிசோதனைகள் செய்யாமல், இறப்புகளை எண்ணாமல் விட்டு விட்டால் இறப்பே இருக்காது பிரதமரே.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-202022:15:03 IST Report Abuse
தல புராணம் கூட்டத்தில் பேசிய பிரதமர், மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை - Why don't you actually come out of your cozy makeup room and see the truth prime minister?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X