பொது செய்தி

இந்தியா

லடாக் பிரச்னை : பிரதமர் மோடி ராஜ்நாத்சிங் ஆலோசனை

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : லடாக் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினர். லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள்

புதுடில்லி : லடாக் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினர்.



latest tamil news



லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது. இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ தளபதி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடியுடனும் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news





வெளியுறவுத்துறை விளக்கம்



தனது எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இந்தியாவின் நடவடிக்கைகள் உள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சீன தரப்பினர் தங்களது நிலையை மாற்ற முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. உயர் மட்ட அளவில் மேற்கொண்ட உடன்படிக்கையை சீனா பின்பற்றி இருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. எல்லைப்பகுதியில் பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண்பதற்கு இந்தியா உறுதியாக நம்புகிறது. இந்தியா சீனா மோதலில் இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறையான்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியாவை போன்றே சீனாவும் செயல்படும் என எதிர்பார்க்கிறோம். என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
17-ஜூன்-202000:11:25 IST Report Abuse
தல புராணம் எப்படி பல்டி அடிக்கலாமென்று ஆலோசனையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X