திருத்தவே முடியாது!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

திருத்தவே முடியாது!

Added : ஜூன் 16, 2020
Share
திருத்தவே முடியாது!'நாட்டு மக்கள் கொரோனாவால் கடும் பீதியில் இருந்தாலும், அரசியல்வாதிகள் மட்டும் காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்' என, தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி தலைவருமான சந்திரசேகர ராவைப் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள். தெலுங்கானாவில், தங்கள் கட்சியை தவிர, வேறு எந்த கட்சியும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக, தன்னிடம்
 திருத்தவே முடியாது!

திருத்தவே முடியாது!

'நாட்டு மக்கள் கொரோனாவால் கடும் பீதியில் இருந்தாலும், அரசியல்வாதிகள் மட்டும் காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்' என, தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி தலைவருமான சந்திரசேகர ராவைப் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள். தெலுங்கானாவில், தங்கள் கட்சியை தவிர, வேறு எந்த கட்சியும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக, தன்னிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி வருகிறார் சந்திரசேகர ராவ்.
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளதை அடுத்து, மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வை அதிரடியாக ரத்து செய்தார் சந்திரசேகர ராவ். இந்த முடிவை அறிவித்ததும், தன் ஆதரவாளர்களிடம், 'இந்தாண்டு, ஐந்து லட்சம் மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த மாணவர்களின் பெற்றோர், நம்மை பாராட்டுவர்' என, பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஆதரவாளர்களில் சிலர், 'தலைவரே... 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, என்ன பயன்... அந்த மாணவர்களுக்கு ஓட்டே இல்லையே. பல்கலை தேர்வை ரத்து செய்தால், பல்கலை மற்றும் கல்லுாரி படிப்பை முடிக்கவுள்ள, புதிய வாக்காளர்களான மாணவர்களின் ஓட்டை அப்படியே அள்ளி விடலாம்' என, ஆலோசனை கூறினர்.
'இந்த ஐடியா, எனக்கு தோன்றாமல் போய் விட்டதே' என, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் சந்திரசேகர ராவ். தெலுங்கானா மக்களோ, 'இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை திருத்தவே முடியாது' என, புலம்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X