சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அந்த கால வரலாறு, இந்த கால, விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:இட ஒதுக்கீடுக்கான மண்டல் கமிஷனை உருவாக்கியது, பா.ஜ., தான். அந்த கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்ததும், பா.ஜ., தான். ஆனால், அப்போது, இந்திராவுக்கு பயந்து, மண்டல் கமிஷன் பற்றி பேசாமல் இருந்தது, தி.மு.க.,



'துாங்குவது போலவும், தமிழக மக்களை தாங்குவது போலவும் நடிப்பது, தி.மு.க., தான் என்கின்றனரே, அ.தி.மு.க.,வினர்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:
தமிழகத்தில் சர்வாதிகாரி, காரியவாதி ஆட்சி நடக்கிறது. அவர்களுடன் கொரோனாவும் சேர்ந்து கொள்ள, மக்கள் நோயுடனும், பசியுடனும் போராடுகின்றனர். துாங்குவது போல நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.


'எல்லாம், கொரோனா பயம் தான் காரணம். உள்ளூரில் கொஞ்சம் குறைந்ததும், வெளிநாடுகள் பற்றி, அரசு நிச்சயம் கவலை கொள்ளும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
அரபு நாடுகளில் வசிக்கும் மலையாள மக்களை அழைத்து வர, கேரள அரசு, 44 விமானங்களை ஏற்பாடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு, ஒரு விமானத்தை கூட, இன்னும் ஏற்பாடு செய்யவில்லை.


'இது தான் எல்லாருக்கும் தெரியுமே; அமைச்சர் நீங்கள், புதிய கருத்தை கூறுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிக்கை
: தமிழகத்தில் கொரோனா தாக்கம் எப்போது குறைகிறதோ, அந்த நேரத்தில், முன்கூட்டியே அறிவித்து, கல்லுாரிகளில் தேர்வு நடத்தப்படும்.



'ஒரு காலத்தில் இருந்தது. தனியார், 'டிவி'கள் ஆதிக்கத்தில், 'டிவி' கல்வி மறைந்து விட்டது...' என, சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:
இணைய வழிக் கற்பித்தல் முறை என்பது, சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி. எனவே, 'டிவி' வாயிலாக, நேரலை வகுப்புகளை நடத்தும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X