சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 15 பேருக்கு பாதிப்பு; 11 பேர் டிஸ்சார்ஜ்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயாளி உள்பட 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.கோவை, ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 28 வயது இளைஞர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அந்த இளைஞரின் குடியிருப்பு பகுதி, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக

கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயாளி உள்பட 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.latest tamil newsகோவை, ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 28 வயது இளைஞர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அந்த இளைஞரின் குடியிருப்பு பகுதி, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இளைஞரின் வீட்டுக்கு அருகில் வசித்த 10 பேருக்கு, நேற்றுமுன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 27 மற்றும் 25 வயது ஆண் பெண், 4, 5 மற்றும் 12 வயது சிறுவர்கள் மேலும் 2 வயது குழந்தை என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆர்.ஜி.புதூர் பகுதியில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோக, கருமத்தம்பட்டி சோதனைச்சாவடியில் வெள்ளக்கிணறை சேர்ந்த 51 வயது ஆண், நெகமத்தை சேர்ந்த 33 வயது இளைஞர், சென்னையை சேர்ந்த 40 வயது ஆண் ஆகிய மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், டில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களில், 17 வயது பெண்ணுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் ஐ.எல்.ஐ., வார்டுக்கு சிகிச்சைக்கு வந்த கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 48 வயது பெண், நீலகிரியை சேர்ந்த 50 வயது பெண் இருவருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.


latest tamil newsமேலும், இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்தவர்களில் ராமநாதபுரம் மற்றும் துடியலூரை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண்கள் இருவர், 61 வயது மூதாட்டிக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்படி ஒரேநாளில் 15 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோவையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.


இதுவரை 308 பேர் டிஸ்சார்ஜ்

கோவை போத்தனுரை சேர்ந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட 49 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கொரோனா தொற்றில் இருந்தும் குணமடைந்தார். இவருடன் சேர்த்து, இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 11 பேர் நேற்று குணமடைந்ததை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இருந்து மொத்தம் 308 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
17-ஜூன்-202005:23:37 IST Report Abuse
siriyaar வேலுமணி அண்ணன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அனைத்து தகவலும் வரும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஜூன்-202005:10:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni இங்கே நெறைய இடத்துலே கொரோன இருக்குன்னு பேசிக்கிறாங்க நான் இங்கே ஒரு முதியோர் இல்லாமலே இருக்கேன் அதான் வெளியே எங்கும் போறது இல்லெண்ணங்கள் என்போன்றபலர் முடியலேன்னா என்னாத்துக்குவேன் அவஸ்தை என்று எண்ணிண்டு வீட்டுலேதான் இருக்கோம் இந்த சீனாக்காரன் என்றபிசாசு ஏவிவிட்டான் இந்தகொரோனா என்ற தீய வியாதியை எவ்ளி கெட்டபுத்திபாருண்கையா நாமெல்லாம் உலகமே வையகமே நோயின்றி நண்ணவளவேண்டும் எல்லோரும் என்றுதான் வேண்டுவோம் அவன் தீய புத்தி சே கேவலமான ஈனப்பிறப்புலே வந்தவங்களே இந்த சீனர்களெல்லாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X