சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவனின் கழுத்தில் குத்திய 2 அடி நீள கொக்கி வெற்றிகரமாக அகற்றம்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

கோவை: தொட்டில் கொக்கி கழுத்தில் ஏறியதில் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்தார்.



latest tamil news



திருப்பூர் மாவட்டம், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த, சிவராஜ் மகன் ரிதிகேஷ்வர், 7. வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கீழே கிடந்த தொட்டில் கட்டும் கொக்கி சிறுவனின் கழுத்தை பதம் பார்த்தது. வலது பக்க கழுத்தில் குத்திய கொக்கி, காது அருகே வெளியே வந்தது.


latest tamil news



கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, 2 அடி நீள கொக்கியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தற்போது, உடல்நலம் தேறியுள்ள சிறுவனை டிஸ்சார்ஜ் செய்யவுள்ளதாக மருத்துவமனை டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
18-ஜூன்-202010:02:43 IST Report Abuse
Varun Ramesh நீக்கு-நீக்கம் சரி அகற்றம் உண்டா?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-202022:35:27 IST Report Abuse
தல புராணம் Cat has 9 lives என்பார்கள்.. இந்த அதிர்ஷ்டசாலி குட்டி பூனைக்கும் தான். Safety first என்று சொல்லி வளர்க்கவும்.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
16-ஜூன்-202022:18:38 IST Report Abuse
Varun Ramesh தமிழ் அகராதியில் அகற்றம் என்ற வார்த்தை உள்ளதா?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
17-ஜூன்-202006:40:25 IST Report Abuse
தல புராணம்நீக்கு - நீக்கம், அதே போல அகற்று - அகற்றம் - சரி தானே ? இல்லையா? யாராவது தமிழ் ஐயா உள்ளாரா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X