பாகிஸ்தான் அமைச்சருக்கு கொரோனா தொற்று..!

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சையத் அமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று (ஜூன் 16) உறுதியாகியுள்ளது.



latest tamil news



பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 4,443 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1.48, 919 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 111 பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 2,839 ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவரான சையத் அமினுல் ஹக், கடந்த ஏப்.6ம் தேதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து டைபாய்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்ந்ததை அடுத்து சுயமாக தனிமைப்படுத்தி கொண்டதாக அவர் தெரிவித்தார். பாக்.,கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எம்.பிக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை மாகாண அமைச்சர் உள்பட 4 அரசியல் தலைவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.


latest tamil news



ஏற்கனவே, சிந்து மாகாண மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சையதா ஷெஹ்லா ராசா கொரோனா உறுதியானதை தொடர்ந்து வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கடந்த வாரத்தில் பாக்., முன்னாள் பிரதமர்களான ஷாஹித் ககான் அப்பாஸி மற்றும் யூசுப் ராசா கிலானி ஆகியோரும், எதிர்க்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப், ரயில்வே அமைச்சரான ஷேக் ரஷீத் அகமது, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களான அஹ்சன் இக்பால் மற்றும் மரியம் அவுரங்கசீப் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
16-ஜூன்-202021:57:12 IST Report Abuse
Chandramoulli விரைவில் சென்றடைய வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X