பொது செய்தி

இந்தியா

சாதிக்க உயரம் தடையல்ல:தடைகளை தகர்த்த மிசோரம் இளைஞர்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐஸ்வால்: சாதிப்பதற்கு உயரம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து காட்டி உள்ளார் இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ள மிசோரம் இளைஞர் ஒருவர்.



latest tamil news



இந்திய ராணுவத்தில் சேரும் இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு வயது வரம்பு ஒரு புறம் இருந்தாலும் உயரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான உயரம் 157செ.மீ ஆகும். அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் உள்ளிட்ட பகுதிிகளை சேர்ந்தவர்களுக்கான உயரம் 152 செ.மீ என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லாசல் மச்சுவானா என்ற இளைஞர் ராணுவத்தில் சமீபத்தில் சேர்ந்துள்ளார். ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் லெப்டினன்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது போட்டோக்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். இது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் கூறுகையில் என்னுடன் இருக்கும் இரு அதிகாரிகளின் உயரம் 6.5 மற்றும் 6.3 அடியாகும். நான் 5.5 அடி உயரம் மட்டுமே கொண்டவன் . அதனால் தான் அவர்களுக்கு மத்தியில் நான் உயரம் குறைந்தவனாக தெரிந்துள்ளேன் என்றார்.

மேலும் நான் இராணுவத்தை மிகவும் நேசிக்கிறேன். ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. என கூறினார்.


latest tamil news


இதனிடையே லால் மச்சுவானா குறித்து மாநில முதல்வர் சோரம்தங்கா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளா் .அதில் புகழ்பெற்ற பீரங்கி படைப்பிரிவின் கீழ் புகழ்பெற்ற இந்திய ராணுவத்தில் ஒரு அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ராம்லூன்' என் 'பகுதியைச் சேர்ந்த எங்கள் சொந்த லெப்டினன்ட் லால்மச்சுவானாவைப் பற்றி மிசோரம் பெருமிதம் கொள்கிறது. என பதிவிட்டு உள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
17-ஜூன்-202003:24:31 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த அதிகாரி ஜி ஆர் விசுவநாதன், எஸ் எம் கவாசுகர் விட உயரம் அதிகம். அவிங்க ரெண்டு பேருமே நெப்போலியனை விட உயரம் அதிகம்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-202023:54:02 IST Report Abuse
தல புராணம் இருகோடுகள் தத்துவம்.. கொரோனா கோட்டை சின்னத்தாக்க சீன எல்லா பிரச்சினை கோட்டை பெருசாக்குன மாதிரி. 6.5 அடி பக்கத்திலே 5.5 அடி சிறியதாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X