எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம்: சீன தரப்பில் 43 வீரர்கள் பலி

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (9+ 85)
Share
Advertisement
 எல்லை,சீன ராணுவம் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம், indian soldiers, india, china,, chinese army, sources, report, violent face-off, border clash, eastern ladakh

லடாக்: லடாக் எல்லையில் சீனா ராணுவத்துடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. மேலும் சீன தரப்பில் 43 வீரர்கள் பலியானதாக தெரிகிறது.

லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.


latest tamil news
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தாகவும், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.


20 இந்திய வீரர்கள் வீரமரணம்இந்நிலையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. மற்றொரு செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு வட்டாரங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய கொடுத்த பதிலடியில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாயினர். மேலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news

இந்திய ராணுவம் விளக்கம்இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறும் போது வன்முறை வெடித்தது. அதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.இதனிடையே, மோதல் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து,கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் சில பகுதிகளில் நிலவும் வன்முறையை குறைக்க இந்திய- சீன ராணுவ மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழர்சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களில் ஒருவர் பெயர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9+ 85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
17-ஜூன்-202016:46:49 IST Report Abuse
Sukumar Talpady துப்பாக்கி சூடு நடக்க வில்லை என்று சொல்லப் படுகிறது . ஆனால் வெறும் கற்கள் ,இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கினால் நமது தரப்பில் 20 வீரர்களும் அவர்கள் தரப்பில் 45 வீரர்களும் இருப்பார்களா? ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் அங்கே கடும் குளிர் இருக்கிறது அது நிஜம். உலகத்திலேயே நட்புக்கு லாயக்கில்லாத நாடு ஒன்று இருக்கிறது என்றால் அது சீனாதான் . முகத்தில் சிரிப்பும், மனதில் நஞ்சும் வைத்திருப்பவர்கள் சீனர்கள் . முதுகில் குத்துவதே அதன் வாடிக்கை. பாகிஸ்தானைத் தவிர்த்து எந்த அக்கம் பக்கத்து நாடுகளுடன் நட்பாக இல்லை அது. பாகிஸ்தானும் ஒரு அடிமை நாடு மாதிரி தான். நமது வீரர்கள் இருந்துள்ளார்கள் என்று கேட்டு பாகிஸ்தானியர்கள் சந்தோசம் அடைந்திருப்பார்கள் .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஜூன்-202000:45:18 IST Report Abuse
மலரின் மகள் நமது வீரர்களை வெறும் கற்கள் இரும்பு கம்பிகள் கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று சொல்வது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. கவசங்கள் இவற்றை தடுக்குமா? அதி பயங்கர ஆயுதங்களை கையாள்வதில் தேர்ந்த நமது வீரர்களை எதோ கிராமத்து ரவுடிகளுடன் சண்டை இடுவது போல பயன்படுத்துவது தவறு. மிக அதி நவீன ஆயுதங்கள் கொண்டு கொள்ளட்டும் எதிரிகளை. இரு நாட்டு போர் வந்துவிடும் என்று அவர்கள் வேண்டுமானால் அஞ்சட்டும். நமது வீரர்களை விட அவர்கள் அதிகம் இறந்தார்கள் என்று கூறி மனதை ஆறுதல் படுத்துவதோ கூடாது. வீரமரணம் என்பது எதிரிகளை அச்சுறுத்தி போர்க்களத்தில் அவர்களை கொன்று குவித்து புறமுதுகிட்டு ஓடிஏ வைத்து வெற்றி பெறுவதில் ஏற்படும் சில மரங்களாக இருக்கட்டும். நமது ராணுவ அதிகாரி ஓய்வு பெற்ற வீரர் தியாகராஜன் யூடுபில் பேட்டி கொடுத்திருப்பதை பாருங்கள். தெளிவு பிறக்கும். அவரின் பேட்டிகள் பலவற்றை பார்த்து அதன் சாராம்சங்களை அணுகுண்டு முதல் நமது ஆயுதங்கள் பயன்களை பற்றி எழுதினேன். அது முழுவதும் அவரின் பெட்டியில் சொல்லப்பட்ட காஸ்மீர் பகுதிகள் மற்றும் லடாக் சுற்றி வைத்திருக்கும் நமது ராணுவத்தின் முகாமில் இருக்கும் அணுஆயுதங்கள் பற்றியும் உள்ளடக்கியது தான். அணுஆயுதங்கள் பற்றிய கருத்துக்கள் அதில் எழுதப்பட்டதாலோ என்னவோ அது பிரசுரிக்காமல் பிசகி இருக்கிறது போலும். உயர்ந்த அதிகாரத்தில் இருந்து ஓய்வு பெற்ற நமது தமிழ் வீரர் தியாகராஜன் பேட்டி சிறப்பாக இருக்கிறது. தினமலரில் இனி எது இதெல்லாம் சீனாவின் பொருட்கள் சீன தயாரிப்புக்கள் என்பதை பட்டியலிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். அப்போது தான் இந்திய குடிமக்கள் நாமாகவே அவற்றில் பெரும்பாலானவற்றை ஒதுக்கி விடலாம். அரசு சில ஒப்பந்தங்கள் செய்திருப்பதால் உடனடியாக பலவற்றை நிறுத்தி சிக்கலில் மாட்டி கொள்ள முடியாது என்பதாலும் அமைதி காக்கத்தான் செய்யும். ஆனால் தனிப்பட்ட முறையில் வாங்கி பயன்படுத்தும் நமக்கு அந்த சிக்கல்கள் இல்லை. ஆகையில் சீனாவின் உற்பத்தி பொருட்கள் என்று இனம் கண்டு கொடுங்கள் அது போதும். கருத்து பகுதியில் மீதத்தை நாங்கள் எழுதுவதும் அதை மற்றவர்களுக்கு பகிர்வதும் சீன பொருட்களை பகிஷ்கரிக்க செய்வதையும் பார்த்து கொள்கிறோம். இந்த ஐ பி எல் என்பது சீனாவின் பல மொபைல் தயாரிப்புகளுக்கு விளம்பரமாகவும் பின்னணியில் அவர்கள் இருப்பது போலவும் கூட சொல்கிறார்கள். அவர்கள் மூலம் பலர்க்கும் குறிப்பாக பெரிய நிறுவனங்களுக்கு வியாபாரம் லாபம் இருப்பதால் அவர்கள் அதை வெளியில் சொல்லாமல் அதையே ஆதரிக்கவும் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். இந்த ஒப்போ, விவோ போனிகள் தேவைதானா? அரசியல் வாதிகளின் ஆதரவில் கால்பதித்தவர்களாக சொல்கிறார்களே?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-ஜூன்-202000:02:27 IST Report Abuse
தல புராணம் Government must become serious and go to the negotiating . We cannot loose our soldiers. The minister Rajnath Singh must rush to the border
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X