சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் மர்ம நோயால் மாடுகள் பாதிப்பு

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் மாடுகளை மர்ம நோய் பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விருத்தாசலம் தாலுகாவில் 40 ஆயிரம் கறவை, காளை மாடுகள் உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகள் உழவு, பால் விற்பனை போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மாடுகள், கடந்த ஒரு சில வாரங்களாக மர்ம நோய் பாதித்து, தீவனம், புற்கள் என எதுவும் சாப்பிட முடியாமல் சிரமப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மாடுகள் மீது முட்டு முட்டாக உருண்டை வடிவில், அம்மை போன்ற தோற்றத்துடன் நோய் பாதித்துள்ளது.

இந்த மாடுகள் தீவனம், தண்ணீர் குடிக்க முடியாமல் எந்நேரமும் கத்தியபடி இருப்பதால், அவற்றை வளர்க்கும் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தற்போது, மாவட்டம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கி வரும் நிலையில் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இது குறித்து சாத்துக்கூடல் விவசாயி சக்திவேல் கூறுகையில்; மாடுகளுக்கு அம்மை போன்று மர்ம நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.உடல் முழுவதும் முத்துக்கள் உருவாகி, மாடுகள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றன.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பிற மாடுகளுக்கும் இந்த நோய் தாக்கம் எளிதில் பரவுகிறது.தற்போது, மஞ்சள் துாள், விளக்கெண்ணெய் கலந்து, கோழி இறகு மூலம் பாதித்த பகுதிகளில் மருந்தாக தடவி வருகிறோம்.இந்த பாதிப்பு நாட்டு மாடுகளுக்கு குறைவாகவும், கலப்பின மாடுகளுக்கு அதிகமாகவும் உள்ளது. எனவே, மாடுகளுக்கு உருவாகியுள்ள நோய் பாதிப்பை கண்டறிந்து, அவற்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.கால்நடை மருத்துவர் சரவணன் கூறுகையில், 'இது ஒருவித வைரஸ் நோய்; இதற்கு தடுப்பூசி கிடையாது. ஒரு வாரத்தில் தானாக சரியாகி விடும்.

இதனால் மாட்டின் உயிருக்கு ஆபத்து கிடையாது. பால் உற்பத்தியும் பாதிக்காது என்பதால் விவசாயிகள் அச்சப்படவேண்டாம் என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X