அமெரிக்காவில் 155 இந்திய நிறுவனங்கள் மூலம் 1.25 லட்சம் வேலை வாய்ப்புகள்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
indian companies, job opportunities, 155. இந்திய நிறுவனங்கள், 1.25 லட்சம், வேலைவாய்ப்புகள்,

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள 155 இந்திய நிறுவனங்கள் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாகவும் அதன் மூலம் வாஷிங்டன், போர்ட்டோரிகோ, டெக்சாஸ், காலிபோர்னியா, நியூஜெர்சி, ஃப்ளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதன்படி டெக்சாஸ் மாகாணத்தில் அதிக பட்சமாக 17,578 வேலைவாய்ப்புகளும், காலிபோர்னியா மாகாணத்தில் 8,271 வேலைவாய்ப்புகளும், நியூஜெர்ஸி மாகாணத்தில் 8,057 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். டெக்சாஸ் மாகாணத்தில் 905 கோடி அமெரிக்க டாலர்களும், நியூஜெர்ஸி மாகாணத்தில் 240 கோடி அமெரிக்க டாலர்களும், நியூயார்க்கில் 180 கோடி அமெரிக்க டாலர்களும் முதலீடு செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜூன்-202004:08:59 IST Report Abuse
J.V. Iyer அமெரிக்காவில் இந்தியா வர்கம் அதிகமாகி விட்டதே? அவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டாமா?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-202022:32:52 IST Report Abuse
தல புராணம் ஆகவே H1 விசாவை நிறுத்தாதீங்க.. அப்படி தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X