சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் குவியும் கூட்டம் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement

சிதம்பரம் : சிதம்பரம் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்கள் வாங்க மக்கள் நெருக்கமாக நிற்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இதனால் மக்கள் கூடும் இடங்களான திருமண மண்டபம், வழிபாட்டு தளங்களை திறக்க அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கொரோனா நிவாரண பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று சிதம்பரம் சி.கொத்தங்குடி ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக கூடினர்.

எவ்வித சமூக இடைவெளியும் இல்லாமல், முகக் கவசம் கூட அணியாமல் பொருட்கள் வாங்க மக்கள் ஒருவர் மீது ஒருவர் முண்டியடித்து பொருட்களை வாங்கினர். கடை ஊழியர்களும் இதனை கண்டு கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் அதிக அளவு பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஆகவே ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X