பிரதமருடனான கலந்துரையாடல்; மம்தா புறக்கணிப்பு?

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோல்கட்டா: பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில், பேச வாய்ப்பு வழங்கப்படாததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்தை புறக்கணிக்க உள்ளார் என திரிணாமுல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன்
PM, Modi, Mamata Banerjee, CMs meeting, மம்தா,மம்தா பானர்ஜி

கோல்கட்டா: பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில், பேச வாய்ப்பு வழங்கப்படாததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்தை புறக்கணிக்க உள்ளார் என திரிணாமுல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இதன்படி இன்று(ஜூன் 16) பகலில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் பங்கேற்றனர். தமிழகம், மஹா., மேற்கு வங்கம், டில்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து திரிணாமுல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், 'நாளைய ஆலோசனையின் போது, மம்தாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை; இது மேற்கு வங்க மக்களுக்கு பெரும் அவமானம்' என கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே மம்தாவுக்கு மத்திய அரசு நெருக்கடி தருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.


latest tamil newsஇதுகுறித்து மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: மத்திய அரசு, மேற்கு வங்க மக்களை மீண்டும் அவமானப்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு வழங்காமல், சைலன்சில் வைக்கவும் முடிவு செய்துள்ளது. முதல்வர்கள் மாநாட்டில், தனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

திரிணாமுல் கட்சி எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார் கூறுகையில், 'முதல்வரை அமைதியாக இருக்க வைத்து, பேச வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பு செய்வது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும். முதல்வரை வீடியோ கான்பரன்சிற்கு அழைத்து, அவருக்கு அச்சப்பட்டு அவரை பேசவிடாமல் மத்திய அரசு வைக்கிறதா?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

'கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் மோடியின் தோல்வியை, மம்தா அம்பலப்படுத்துவார் என மத்திய அரசு கவலை கொள்கிறது' என முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஜூன்-202011:57:54 IST Report Abuse
Lion Drsekar இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ், நேபாள், வங்காள தேஷ். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிரதமர் . வந்தே மாதரம்
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
17-ஜூன்-202011:55:41 IST Report Abuse
RAVIKUMAR ஒட்டு மொத இந்தியாவில் ஒரே ஆம்பள ..ஜெயலலிதா போல துணிச்சல் .ஆனால் அதிலே கலக்காத ஊழல் மற்றும் ஆணவம்.. எளிமையும் திண்மையும் சேர்ந்த உருவம் ...உங்கள போல சிஎம் எங்களுக்கு கிடைக்கலியே, வாய்ச்சதெல்லாம் அடிமை பட்டாளம்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
17-ஜூன்-202010:02:39 IST Report Abuse
sankar இவரை மக்கள் புறக்கணிக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X