தமிழ்நாடு

பரவனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொய்வு: 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் பாதிப்பு

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 16, 2020
Share
Advertisement
பரவனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி  தொய்வு: 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் பாதிப்பு

புதுச்சத்திரம் : கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கும் பூவாலை - குண்டியமல்லூர் இணைப்பு பாலம் கட்டுமானப் பணியை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பூவாலை - குண்டியமல்லூர் பகுதியை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பூவாலை, அலமேல்மங்காபுரம், பால்வாத்துண்ணான்,வேளங்கிப்பட்டு, வில் லியநல்லூர், சேந்திரக்கிள்ளை, புதுச்சத்திரம், அத்தியாநல்லூர், கொத்தட்டை உள் ளிட்ட சுமார் 25 க்கும்மேற்பட்ட பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையை பயன்படுத்திவருகின்றனர்.

இந்த சாலையின் நடுவே பரவனாறு உள்ளது. மழைக்காலங்களில் பரவனாற்றில் வெள்ளப்பெருக்குஅதிகமாக இருக்கும், இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு செல்ல, சாத்தப்பாடி வழியாக சுமார்10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும் .மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க பெரும்அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகளை தொடர்ந்து, கடந்த 2017 ம் ஆண்டு ஆர்.ஐ.டி.எப். திட்டத்தின் கீழ், நபார்டு நிதியுதவி மூலம் 9.47 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட இணைப்பு பாலம் கட்டும் பணி துவங்கியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதனால் மழைக்காலங்களில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சாத்தப்பாடி வழியாக குறிஞ்சிப்பாடிக்கு சுற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் பூவாலை - குண்டியமல்லூர் இணைப்பு பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதுகுறித்துகேட்டபோது, பரவனாற்றில் ஆறு மாதம் தண்ணீர் செல்லும், இதனால் அப்போது கட்டுமானப்பணி செய்ய முடியாது. எனவேஅடுத்த ஆறு மாதம் தண்ணீர் வரத்து குறையும்போது தான் கட்டுமானப்பணி நடக்கும். இதனால் தான் பாலம் கட்டும் பணிகாலதாமதமாகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் சில மாதங்களில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில், பூவாலை - குண்டியமல்லூர் இணைப்பு பாலத்தைவிரைந்து முடித்தால், சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிக்குசெல்ல ஏதுவாக இருக்கும்.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு பூவாலை - குண்டியமல்லூர் இணைப்புபாலத்தை விரைந்து முடிக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X