புதுடில்லி: லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஒருதலைபட்சமாக சீனா நடந்ததால், இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: லடாக் நிலவரம் குறித்து, இந்தியா - சீனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜூன் 6ல் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இரு தரப்பும் சுமூகமாக போக முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரச்னை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கால்வான் பள்ளத்தாக்கில், நேற்று(ஜூன் 15) மாலை மற்றும் இரவில், இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனா ஒருதலைபட்சமாக நடந்தது. இதனால், இருதரப்பும் நேருக்கு நேர் மோதும் சூழல் உண்டானது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

எல்லைக்கட்டுப்பாட்டை பின்பற்றி, இந்திய எல்லைக்குளேயே நமது நடவடிக்கைகள் இருந்தன என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. சீன தரப்பிலிருந்தும் இதனை எதிர்பார்க்கிறோம். எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் இந்திய இறையாண்மையை பேணிப்பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE