சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அபராதம் வசூல் போலி எஸ்.ஐ., கைது

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு; திருச்செங்கோடு அருகே, முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்த, போலி எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, சீத்தாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி பாலகிருஷ்ணன், 44. கருவேப்பம்பட்டி பிரிவு சாலையில், நேற்று மதியம் பைக்கில் சென்றார்.அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர், தன்னை போலீஸ், எஸ்.ஐ., எனக் கூறி, முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம், அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தார். பாலகிருஷ்ணனிடமும், 500 ரூபாய் அபராதம் வசூலித்தார்.

சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன், திருச்செங்கோடு புறநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார், அபராதம் வசூலித்த, போலி எஸ்.ஐ., ரத்தினம், 46, என்பவரை கைது செய்தனர். இவர், 2018ல் எஸ்.ஐ., எனக் கூறி, விசைத்தறி அதிபரிடம் பஞ்சாயத்து பேசியதாக, கைது செய்யப்பட்டவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X