பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் மருத்துவமனை அமைக்கும் திட்டம்: தேயிலை எஸ்டேட் தொழிலாளர் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்ட வேண்டும் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.வால்பாறையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக, வால்பாறையில் மனித - வனவிலங்கு மோதல் அதிகமாக காணப்படுகிறது.
பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிடுவதால் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி தொழிலாளர்களை தாக்குவதால், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இதனால், சிகிச்சைக்காக வரும் தொழிலாளர்களை பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். தொலை துார பயணத்தின் போது, சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட்களின் சார்பில் நகரில் அனைத்து வசதிகளுடன் நவீன மருத்துவமனை கட்ட வேண்டும் என்று, தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்று வரை மருத்துவமனை அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எஸ்டேட் நிர்வாகங்களும், தொழிற்சங்க தலைவர்களும் எடுக்கவில்லை.
தொழிலாளர்கள் கூறியதாவது:குறைந்த சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, சிறந்த முறையில் சிகிச்சை பெற தரமான மருத்துவமனை இல்லை. எனவே, அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் ஒன்றிணைந்து, வால்பாறை நகரில் அனைத்து தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் நவீன மருத்துவமனை கட்ட வேண்டும்.இக்கோரிக்கையை வலியுறுத்தி, தொழிற்சங்க தலைவர்கள் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காக போராட்டம் நடத்தினர். அதன் பின், யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால், தொழிலாளர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.இவ்வாறு, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X