பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பின்றி ரோடு விரிவாக்கம்: வாகன ஓட்டுனர்கள் திக்திக் பயணம்

Added : ஜூன் 16, 2020
Share
Advertisement
 பாதுகாப்பின்றி ரோடு விரிவாக்கம்: வாகன ஓட்டுனர்கள் திக்திக் பயணம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ரோடு விரிவாக்க பணிகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நடப்பதால், வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலை துறையின் கீழ், பல்வேறு மேம்பாட்டு பணிகள், ரோடு விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், ஜமீன் முத்துார் - நல்லிக்கவுண்டன்பாளையம் ரோடு விரிவாக்க பணி முக்கியமானது.பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டால், இந்த ரோடு தான் மாற்றுப்பாதையாக பயன்படுகிறது. அதிக வளைவுகளுடன், குறுகியதாகவும் இருப்பதால், விபத்து அபாயம் உள்ளது.இதற்கு தீர்வாக, ரோடு அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, ரோட்டின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, மண், ஜல்லிக்கற்கள் கொட்டி, சமப்படுத்தி, ஏற்கனவே உள்ள ரோட்டின் மட்டத்துக்கு வந்ததும், தார் போட்டு அகலப்படுத்துகின்றனர்.இதற்காக, பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், திடீரென கொரோனா ஊரடங்கு அமலானது. பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டது.ஆனால், ரோட்டோரம் உள்ள பள்ளங்களை சீரமைக்கவில்லை. வாகனங்கள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடாமல் இருக்க, பாதுகாப்பு தடுப்புகளும் வைக்கவில்லை.இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X