4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு

Added : ஜூன் 16, 2020
Share

நாமக்கல்; நான்கு மாவட்டங்களில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கறிக்கோழி கொள்முதல் விலை, ஒரே நாளில், 18 ரூபாய் சரிந்துள்ளது.ஒருங்கிணைப்புக் குழுதமிழகத்தில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 35 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு -பி.சி.சி., - தினமும் நிர்ணயம் செய்கிறது.கடந்த, 2ம் தேதி, 133 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட விலை, படிப்படியாக குறைந்து, 13ம் தேதி, 108 ரூபாயாக இருந்தது. நேற்று, 18 ரூபாய் குறைக்கப்பட்டு, 90 ரூபாயாக, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள்சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:கொரோனா பரவலால், கறிக்கோழி நுகர்வு சரிந்து, தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. வாரத்துக்கு, 2.50 கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.குறைய வாய்ப்புசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 19ம் தேதி முதல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு தினமும் அனுப்பப்படும், 10 முதல், 12 லட்சம் கிலோ கறிக்கோழிகள், பண்ணைகளில் தேங்கி விடும்.

இதன்மூலம், முன்பு போல், கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விடும் என்ற அச்சத்தில், பண்ணையாளர்கள் கறிக்கோழியை விற்பனை செய்ய முன் வந்துள்ளனர்.மேலும், கோழியின் எடையும், தற்போது, 2 முதல், 2.200 கிலோவாக அதிகரித்துள்ளது. இதை வியாபாரிகள் பயன்படுத்தி, கொள்முதல் விலையை குறைத்து வருகின்றனர். கொள்முதல் விலை, 90 ரூபாயாக இருந்தாலும், 80 ரூபாய்க்கே எடுக்கின்றனர். இது, மேலும் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X