தமிழ்நாடு

தென்னையில் கோகோ: பருவமழைக்கு பரிந்துரை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிரிடுவதால், நல்ல லாபம் ஈட்டுவதுடன், இயற்கை உரமும் பெறலாம் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி விவசாயிகள், கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கில், தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்னந்தோப்பில் கோகோ ஊடுபயிராக சாகுபடி செய்ய சிறந்த பயிர் என தோட்டக்கலை துறையினர் பரிந்துரை செய்கின்றனர்.சாக்லேட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் கோகோவுக்கு நல்ல சந்தை மதிப்பும் உள்ளது.கோகோ பயிருக்கு, 50 - 60 சதவீத நிழல் இருக்க வேண்டும் என்பதால், தென்னந்தோப்பு சிறந்த இடமாக அமைகிறது. ஒரு ஏக்கருக்கு, 200 நாற்றுகள் நடலாம். மூன்றாண்டுகளில் காய்ப்புக்கு வரும்; ஐந்தாண்டுகளில் முழு வீச்சில் காய்க்கத் துவங்கும். ஒரு மரத்துக்கு, ஆண்டுக்கு இரண்டு கிலோ உலர்ந்த கோகோ பீன்ஸ் கிடைக்கும். ஒரு ஏக்கரில் ஆண்டு வருமானம், 65 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் பெறலாம்.சாக்லேட் நிறுவனங்கள் உலர வைக்கப்பட்ட கோகோ விதைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்கின்றன.இது தவிர, கோகோ செடிகளில் இருந்து ஒரு ஏக்கருக்கு, 400 கிலோ இலைகள் கிடைக்கின்றன. அவை பொட்டாஷ் சத்து மிக்க இயற்கை உரமாக அமைகின்றன. தோப்பின் ஈரப்பதத்தை காக்கவும் இவை இயற்கை மூடாக்காக பயன்படுகின்றன. கோகோ பயிரிட்ட தோப்பில் களைகள் குறைகின்றன.கோகோ சாகுபடிக்கு தோட்டக்கலை துறையில் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் நான்கு ெஹக்டேருக்கு மானியம் கிடைக்கும். தற்போது, தென்மேற்கு பருவமழை துவங்கும் தருணம் என்பதால், கோகோ நாற்றுகளை நடவு செய்ய நல்ல பருவமாக இருக்கும்.கோகோ பயிரிட ஆர்வமுள்ள விவசாயிகள், தங்கள் பகுதி தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X