அமராவதி அணையில் பசுமை திரும்பியதால் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணையில் பசுமை திரும்பியதால் முகாம்

Added : ஜூன் 17, 2020
Share
 அமராவதி அணையில்  பசுமை திரும்பியதால் முகாம்

உடுமலை:மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், மழை துவங்கியுள்ளதால், யானைகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் அமராவதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளன.தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில், பசுமை திரும்பியுள்ளன.மழையால், அணையை ஒட்டியுள்ள வனத்திற்குள் இருக்கும் யானைக்கூட்டங்கள், அமராவதி அணைப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளன.உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் கூறியதாவது: பருவ மழை துவங்கியுள்ளதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் பூச்சிகள் உள்ளிட்டவை பெருக்கம் அதிகரிக்கும். அதனால், கொடைக்கானல், புங்கன் ஓடை வனப்பகுதியிலுள்ள யானைக்கூட்டங்கள், உள்ளிருக்க முடியாமல், அணைப்பகுதிக்குள் வருகின்றன.அணை நீர் தேங்கும் பரப்பில் பசுமை அதிகரித்துள்ளதால், அங்குள்ள புற்களை உணவாக கொண்டும், தண்ணீர் குடித்தும் வருகின்றன. பின்னர், அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சுற்றி வருகின்றன.அதே போல், காட்டு மாடு, மான் கூட்டங்களும் அதிகளவு அணைக்குள் காணப்படுகிறது. உடுமலை- மூணாறு ரோட்டில், போக்குவரத்தும் குறைந்து, அமைதியான சூழல் உள்ளதால், அதிகளவு வன விலங்குகள் ரோடு, அணைப்பகுதியில் தற்போது காணப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X