பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வீடு கட்டியும் வசிக்க முடியாத சோகம்: ராமநாதபுரம் வீரர் வீர மரணம்

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருவாடானை: இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடுக்கலுாரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி 40, வீரமரணமடைந்தார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடுக்கலுாரைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து 65. இவரது மனைவி லோகம்பாள் 60. இவர்களது மகன்கள் பழனி, இதயக்கனி 35. இந்திய - சீன எல்லையான லே பகுதியில் ராணுவ பீரங்கி ஆப்பரேட்டராக (ஹவில்தார்) பழனி
border stand-off, Havildar Pazhani, india china, Galwan Valley, tamil nadu, tn news

திருவாடானை: இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடுக்கலுாரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி 40, வீரமரணமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடுக்கலுாரைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து 65. இவரது மனைவி லோகம்பாள் 60. இவர்களது மகன்கள் பழனி, இதயக்கனி 35. இந்திய - சீன எல்லையான லே பகுதியில் ராணுவ பீரங்கி ஆப்பரேட்டராக (ஹவில்தார்) பழனி பணியாற்றினார். இதயக்கனி ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக உள்ளார்.

லடாக்கில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர். ஜூன் 15 நள்ளிரவு 3:00 மணிக்கு எல்லையில் நடந்த மோதலில் பழனி உட்பட இந்திய வீரர்கள் மூன்று பேர் வீரமரண மடைந்தனர். பழனிக்கு மனைவி வானதிதேவி 34, மகன் பிரசன்னா 10, மகள் திவ்யா 8, உள்ளனர். இவர்கள் ராமநாதபுரம் அருகே கழுகூரணியில் வசிக்கின்றனர்.

பழனி உடல் கடுக்கலுாருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. பழனியின் மனைவி வானதி தேவி, கண்ணீர் மல்க கூறியதாவது: என் கணவர் பீரங்கி இயக்குவதில் திறமை மிக்கவர். ஜனவரியில் புது வீட்டிற்கு நிலைக் கதவு வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.லடாக் பகுதிக்கு சென்றது முதல் அலைபேசியில் பேச முடியவில்லை. தொலைபேசியில் நான்கு நிமிடம் பேசுவார். கழுகூரணியில் புதிய வீடு கட்டி ஜூன் 3ல் அவரது பிறந்த நாளில் கிரகபிரவேசம் நடந்தது.அதற்கு கூட வராமல் நாட்டிற்காக பணியாற்றினார். வங்கியில் கடன் வாங்கி, நகைகளை விற்று வீடு கட்டினோம். அதில் வாழ்வதற்குள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அவரது உடலை விரைவில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தந்தை காளிமுத்து கூறியதாவது: இரு மகன்களுக்கும் அவர்கள் விருப்பப்படி ராணுவத்தில் வேலை கிடைத்தது. பழனி 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். சில வாரங்களுக்கு முன் நடந்த வீடு கிரகப்பிரவேசத்திற்கு கூட வரவில்லை. நேற்று காலை 9:00 மணிக்கு அவரின் இறப்பு தகவல் தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரின் குழந்தைகளுக்கு எப்படி ஆறுதல் கூறுவதென்று தெரியவில்லை, என்றார்.


ரூ.20 லட்சம் நிவாரண நிதிமுதல்வர் பழனிசாமி அறிக்கை: இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே நடந்த மோதலில் வீரர் பழனி இறந்த செய்தி, மிகுந்த மன வேதனை அளித்தது. நாட்டிற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கவும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தலைவர்கள் இரங்கல்வீர வணக்கம்

லடாக்கில் இன்னுயிர் ஈந்த இந்திய ராணுவ வீரர்கள் தியாகத்துக்கு வீரவணக்கம். 22 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கிறேன்.- ஸ்டாலின், தலைவர், தி.மு.க.---

போர் தவிர்க்கப்பட வேண்டும்

லடாக் பகுதியில் பதற்றம். இந்திய சீன எல்லையில் மோதல். இந்திய படையினர் பலி. தமிழகம் திருவாடானை- கடுக்கலூர் பழனியும் வீரச்சாவு. கொரோனா நெருக்கடியில் போர் தவிர்க்கப்பட வேண்டும்.- திருமாவளவன், தலைவர், வி.சி.,

அமைதி வழி தீர்வு

எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இந்திய வீரர் பழனியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.கமல், தலைவர், மக்கள் நீதி மய்யம்

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
18-ஜூன்-202014:44:13 IST Report Abuse
Murthy நாட்டின் எல்லையை காப்பது ராணுவத்தின் கடமை, அதுபோல ராணுவ வீரர்கள் ஒவொருவரையும் காப்பது அரசின் கடமை. இரண்டு நாட்களுக்குமுன் பேசிய ராஜ்நாத்சிங் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்கிறார், பொய் சொன்னாரா? போரே இல்லாமல் இவளவு உயிர்கள் போனதுக்கு யார் பொறுப்பு? பொறுப்பற்ற அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். இதுவரை ஆளும் அரசியல் தலைவர்கள் சீனாவை கண்டிக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
Rate this:
Cancel
ராஜா - Chennai,இந்தியா
18-ஜூன்-202001:13:11 IST Report Abuse
ராஜா நாட்டுக்காக தனது உயிரை கொடுத்த வீரனுக்கு இந்த நாடே துணையிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
17-ஜூன்-202010:04:41 IST Report Abuse
Krishnan G வீர மரணம் அடைந்த நமது வீரருக்கு எனது மரியாதையுடன் கூடிய வீர வணக்கங்கள். உங்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல மன தைரியத்தையும் எல்லா வளங்களையும் மன நிம்மதியையும் அளிப்பாராக...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X