பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே மேம்பால பணியை எப்ப முடிப்பாங்க! போக்குவரத்து பாதிப்பால் இம்சை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
ரயில்வே மேம்பால பணியை எப்ப முடிப்பாங்க! போக்குவரத்து பாதிப்பால் இம்சை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில், ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடித்து, போக்குவரத்து பிரச்னைக்களுக்கு தீர்வு காண வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் பாதை குறுக்கிடுகிறது.
அப்பகுதியில், ரயில்வே கேட் செயல்பட்டு வந்தது. இதனால், ரயில்கள் கடக்கும் வரை, வாகனங்கள் நின்று செல்ல வேண்டியது இருந்தது.இரு மாநில இணைப்பு நெடுஞ்சாலை மற்றும் நகரப்பகுதி என்பதால், ரயில்வே கேட் அடைக்கப்படும் போது, போக்குவரத்து ஸ்தம்பித்து மக்கள் அவதிக்குள்ளாயினர்.இதற்கு தீர்வாக, அப்பகுதியில் நான்கு வழி மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நெடுஞ்சாலை துறையின் திட்ட பிரிவு சார்பில், 40 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்தாண்டு துவங்கப்பட்டது. மேம்பால கட்டுமான பணிகளுக்காக ஒரு கி.மீ., துாரம் பாலக்காடு ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகளின் வியாபாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலால், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. மேம்பால கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் வசிப்போர், தொழில் செய்வோர் நிலைமை மேலும் மோசமானது.இரண்டு மாதங்களுக்கு பின், சமீபத்தில் அரசுத் திட்ட பணிகளை கட்டுப்பாடுகளுடன் தொடர அனுமதி கிடைத்துள்ள நிலையில், குறைந்த தொழிலாளர்களை கொண்டு, பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.இதே நிலை நீடித்தால், டெண்டர் கெடுவுக்குள் பாலம் கட்டி முடிக்கப்படுவது சாத்தியம் இல்லை. பாலம் கட்டி முடித்து, சர்வீஸ் ரோடுகள் அமைத்து, போக்குவரத்து அனுமதிக்கப்படும் வரை, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முடங்கியே இருக்கும் அபாயம் உள்ளது.
மாற்றுப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ள மீன்கரை ரோட்டிலும், ரோடு விரிவாக்கப்பணி, சந்தைப்பேட்டை, மார்க்கெட் ரோட்டில், பாதாள சாக்கடை பணி நடப்பதால், அவ்வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்களின் பாதிப்பை தவிர்க்கவும், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணவும், ரயில்வே மேம்பால பணியை வேகப்படுத்தி நிறைவு செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பாலம் அமைக்கும் திட்டத்தை துவங்க இழுபறி ஏற்பட்டது. தற்போது, பாலத்தின் வடிவமைப்பில் சர்ச்சை, பணிகளில் ஏற்படும் தாமதத்தால், அடிப்படை வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
இதை, அரசும், ஆட்சியாளர்களும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.பணியில் வேகம் தேவை!மக்கள் கூறுகையில், 'மேம்பால பணிகள் துவங்கப்பட்டு, போக்குவரத்து முடங்கிய பின், இப்பகுதியில் யாரும் வாடகைக்கு வீடோ, கடையோ கேட்டு வருவது முற்றிலும் நின்று விட்டது. வாடகைக்கு இருந்தவர்களும் காலி செய்து வருகின்றனர்.கடைகளில் வியாபாரம் முற்றிலும் சரிந்து விட்டது. இதே நிலை நீடித்தால், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். பாலம் கட்டுமான பணிகளை விரைவு படுத்தி, குறித்த கெடுவுக்குள் முடித்து, போக்குவரத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X