பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் கனமழை: அணை நீர்மட்டம் உயர்வு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில் பெய்த கனமழையால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.வால்பாறையில், கடந்த ஜூன் மாதம், 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்கிறது. இதனால், தேயிலை உற்பத்தி வெகுவாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் இரவு, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பெய்த மழையால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.தென்மேற்குப்பருவ மழை துவங்கியதையடுத்து தேயிலை உற்பத்தியும் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 123 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 35 கனஅடி தண்ணீர் வீதமும், சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுவதால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 52.13 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 106 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 10, வால்பாறை - 7, மேல்நீராறு - 12, கீழ்நீராறு - 9, பரம்பிக்குளம் - 4 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X