யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

Added : ஜூன் 17, 2020
Share

வால்பாறை:வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், யானைகள் நடமாடுவதால், வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வனத்தில் வறட்சி நீங்கியதால் வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், பருவமழை துவங்கியுள்ளதால், கேரளாவில் இருந்து யானைகள் அதிக அளவில், வால்பாறைக்கு வர வாய்ப்புள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் இருந்து அட்டகட்டி, ஆழியாறு செல்லும் வழியில் இரண்டு இடங்களில் யானைகள் ரோட்டில் நடமாடுகின்றன.எனவே பொள்ளாச்சி செல்வோர், வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X