பெட்ரோல் விலையை குறைக்க சோனியா வலியுறுத்தல்

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Sonia Gandhi, congress, fuel price, fuel price hikes

புதுடில்லி,: ''கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும் போது, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்துவது, மிக மோசமான செயல். உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்திஉள்ளார்.
இது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளதாவது:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும், 9 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இதன் பலனை மக்களுக்கு அளிக்க, மத்திய அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.




சுகாதார பிரச்னை



கொரோனா மற்றும் ஊரடங்கால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து, அவர்களை மேலும் அவதிப்படுத்துவதை ஏற்க முடியாது.இதுபோன்ற நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, மோசமான செயல். தவறான வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு விலையை உயர்த்துகிறது. தற்சார்பை பின்பற்றும்படி மக்களை, மத்திய அரசு வற்புறுத்துகிறது. ஆனால், அவர்களை நிதி தொடர்பான விஷயத்தில் கடுமையாக முடக்குகிறது. இப்படியிருந்தால், எப்படி தற்சார்பை பின்பற்ற முடியும். பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இதனால், அரசுக்கு நஷ்டம் ஏற்படப் போவது இல்லை. அரசுக்கு கிடைக்கும் லாபத்தை, பொதுமக்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். நாடு, கடுமையான பொருளாதார பின்னடைவையும், சுகாதார பிரச்னையையும் சந்தித்து வருகிறது.


கடும் பாதிப்பு



சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் கைகளுக்கு பணம் சென்றடைந்தால் தான், பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கும். இவ்வாறு, சோனியா கூறியுள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, காங்., தலைவர் சோனியா, கடிதமும் எழுதியுள்ளார். இதற்கிடையே, விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை, 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN - Coimbatore,இந்தியா
17-ஜூன்-202019:03:43 IST Report Abuse
NATARAJAN நானும் இருக்கிறேன் பாத்துக்கோங்கோ
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-202018:26:20 IST Report Abuse
sankar பெட்ரோல் டீசல் விலை சர்வேதச நிலமையை பொறுத்துதான் . அரசு செலவினங்களுக்கு பணம் தேவை . மக்கள் பெரும்பாலும் வீட்டில் தான் இருக்கிறார்கள் அவர்களின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பாதிக்காது . சரக்குகளை மட்டும் விலை அதிகரிப்பு பாதிக்கும் அது தவிர்க்க இயலாது நாட்டின் பாதுகாப்புக்கு பணம் தேவை . கோறணவுக்கும் பணம் தேவை . மக்கள் புரிந்த்து கொள்ளுவார்கள் . சோனியா அடித்த பணத்தில் ஒரு ரெண்டாயிரம் கோடி கொடுக்கலாமே
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
17-ஜூன்-202012:46:15 IST Report Abuse
Nallavan Nallavan லிட்டருக்கு 6 ரூபாயைக் கடந்தது: 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு இவர்கள் கொடுத்த 1000 ரூபாயை டாஸ்மாக் பெட்ரோல் விலை உயர்வு என்று பிடுங்கிவிடுவார்கள் போல ஏழைகளிடம் இருந்து , BUS TRAIN இல்லை இப்போ விலை உயர்வு இது TWOWHEELR / டாக்ஸி இவர்களுக்கு பாதிப்பு இது அரசுக்கு லாபம் இந்த அரசு ஏழைகளை சுரண்டி இன்பம் காணும் அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X