அரசியல் செய்தி

தமிழ்நாடு

பியுஷ் கோயலுக்கு ஸ்டாலின் கோரிக்கை

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 பியுஷ் கோயலுக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை; 'ரயில்வே பாதுகாவலருக்கான தேர்வில், சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தெற்கு ரயில்வேயில், சரக்கு ரயில்களின் பாதுகாவலருக்கான தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது, அதிர்ச்சி அளிக்கிறது.இது, தமிழர்களுக்கு எதிரான, திட்டமிட்ட புறக்கணிப்பிற்கான மற்றொரு ஆதாரம். இந்த ஆட்சேர்ப்பு முறைமையை, மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, சமூக நீதியையும் உறுதி செய்யுமாறு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
17-ஜூன்-202019:55:08 IST Report Abuse
Raj இவங்களோட ஆலோசகர் யாரு? பிரசாந்த் கிஷோர். அவரை நியமிக்கும் போது சமூகநீதியை உறுதி செய்தார்களா? ஊருக்குத்தான் உபதேசமா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-ஜூன்-202019:20:07 IST Report Abuse
Girija நம்ப படிப்பின் தரம் அம்புட்டுதான். உங்கள் மகள் நடத்தும் பள்ளியில் மற்றும் குடும்பமே நடத்தும் பள்ளிகளில் நம் ஜாக்ட்டோ ஜியோ இருக்கும் ஆசிரியர்களை ஏன் பணி அமர்த்தவில்லை? திமுக ஆட்சியில் நிர்வாகத்தை கட்சி ஆபிஸ் ஆகியதன் வினை இது. மக்கள் செய்தித்துறை உள்ள ஊழியர்கள் அனைவரும் யார்? ஜர்னலிசம் படித்து வந்தவர்களா? கட்சியில் போஸ்டர் ஒட்டி சிபாரிசில் சேர்ந்தவர்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-ஜூன்-202019:07:22 IST Report Abuse
RajanRajan டீ ன் பி சி முதல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வரை விற்று துட்டு பார்த்த கூட்டமிது. இன்னிக்கு முதல கண்ணீர் விட்டு பார்க்குது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X