அரசியல் செய்தி

தமிழ்நாடு

குணமடைவோர் அதிகம் சொல்கிறார் உதயகுமார்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; ''நாட்டிலேயே, தமிழகத்தில் தான், குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது,'' என, அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சென்னை, திருவொற்றியூர் மண்டலத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, வெப்பமானி, பிராணவாயு பரிசோதிக்கும் கருவி உள்ளிட்ட, உதவி பொருட்களை, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேற்று வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி : கொரோனா தொற்று பாதித்தோருடன், தொடர்பு உள்ளவர்களை கண்டறியும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது.

நாட்டிலேயே, தமிழகத்தில் தான் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், நோய் தொற்றை தடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. சென்னையில், 140 நகர நலவாழ்வு மையங்கள், 19 மருத்துவமனைகள் உட்பட, 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

தொற்று அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் களங்கம் கற்பிக்க முனைவது ஏற்புடையதல்ல. மனசாட்சியின்றி செயல்படுகின்றனர். காவல் துறை, டாக்டர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் போன்றோரை, ஸ்டாலின் பாராட்டியதே இல்லை. இந்தியாவில், நாளொன்றுக்கு, 15 அறிக்கைகள் விடும், ஒரே எதிர் கட்சித்தலைவர் ஸ்டாலின் மட்டுமே.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X