பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கூடுதல் கொரோனா வார்டுகள்

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

சென்னை; சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கூடுதல் கொரோனா வார்டுகள் அமைக்க, பொதுப்பணி துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில், சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் எண்ணிக்கை காரணமாக, இவை நிரம்பி உள்ளன.

இதையடுத்து, கல்லுாரிகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வரும் நாட்களில், எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கூடுதல் வார்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் மட்டுமின்றி, மற்ற அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா வார்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் கட்டடங்களிலும், இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இப்பணிகளை துவங்கும்படி, பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான பணிகளை, பொதுப்பணி துறையின் மருத்துவ கோட்ட பிரிவினர் துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X