பிராமணர்களுக்கு வாரியம் கர்நாடக முதல்வர் அசத்தல்

Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பெங்களூரு; ''பணம், சொத்துகளை விட, பிராமணர் சமுதாயத்தினர், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து நாகரிக சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகின்றனர்.

பிராமணர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திறமை விருதுகள், தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, விடுதிகள் கட்டித் தரப்படும்,'' என, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உறுதி அளித்தார். பிராமணருக்கு வாரியமும் துவக்கி வைத்தார்.கர்நாடக பிராமண சங்கத்தின், 'லோகோ'வை, முதல்வர் எடியூரப்பா, பெங்களூரு குமார கிருபா சாலையிலுள்ள முதல்வர்இல்லத்தில், இம்மாதம் 10ம் தேதி அறிமுகப்படுத்தினார்.

அதன் பின் அவர் அளித்த பேட்டி:பிராமணர் சமுதாயத்தினர் நலனுக்காக, பிராமணர் வாரியம், புதிய அலுவலகம், குறியீடு, இணையதளம் துவக்கி வைத்துள்ளேன். அனைத்து சமுதாயத்திலும் வசதி படைத்தவர்கள், ஏழைகள் உள்ளனர்.அதே போன்று, பிராமணர் சமுதாயத்திலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளனர். இவர்கள் மேம்பாட்டுக்காகவே, 'பிராமணர் வாரியம்' அமைக்கப்பட்டது.இச்சமுதாயத்தினருக்கு, 1,000 ஆண்டு வரலாறு உள்ளது. நாட்டின் வரலாற்றில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. குறிப்பாக, கல்வி, கலாச்சாரத்தில், இவர்களின் செயல்பாடு தனித்துவம் வாய்ந்தது.கொள்கைப் படி சங்கராச்சார்யா, ராமானுஜாச்சார்யா, மத்வாச்சார்யா செயல்பட்டனர். தங்கள் குருவின் கருத்துகளை பரப்பினர். சமுதாயத்தின் நலனுக்காக உயர்ந்த கருத்துகளை வழங்கியுள்ளனர்.இச்சமுதாயத்தினர், பணம், சொத்தை விட, கல்விக்கு முக்கியத்துவம்கொடுத்து, நாகரிக சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகின்றனர்.கல்வி, திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, இத்திட்டங்கள் உதவும்.பிராமண மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திறமை விருதுகள், தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, விடுதிகள் கட்டித் தரப்படும்.ஆதரவற்றோர், வீடற்றோர், மாற்றுத்திறனாளி விதவையர், முதியோருக்கு மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ பரிசோதனை அளிப்பது வரவேற்கத்தக்கது.இலவச திருமணம், உபநயனம் உட்பட இளைய சமுதாயத்தினருக்கான அபிவிருத்தி விழாக்கள் நடத்துதல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் இளைஞர், இளம் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள், ஊக்கத் தொகை திட்டங்கள் உள்ளன

. இத்திட்டங்கள், இவர்கள் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.கர்நாடகத்தில் மூன்று சதவீத பிராமண மக்கள் உள்ளனர். இவர்களின் வளர்ச்சிக்கு அரசு முழு ஆதரவளிக்கும்.பிராமணர் அபிவிருத்தி வாரிய தலைவர் ஹலேபேடு சியாமனா சச்சிதானந்த மூர்த்தி, இச்சமுதாயம் அபிவிருத்தி அடையும் வகையில் செயல்படுவார்.இந்த புதிய அலுவலகமும், இணையதளமும், பிராமணர் சமுதாயத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichs - Tiruchi,இந்தியா
18-ஜூன்-202000:00:29 IST Report Abuse
ravichs இது ஒரு சூப்பர் மூவ் . இதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது எடியூரப்பா அவர்களிடம் இருக்கிறது
Rate this:
Cancel
யார்மனிதன் - Toronto,கனடா
17-ஜூன்-202018:52:04 IST Report Abuse
யார்மனிதன் அப்புடியே ...
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
17-ஜூன்-202014:27:07 IST Report Abuse
Shaikh Miyakkhan கர்நாடகத்தில் மூன்று சதவீத பிராமண மக்கள் உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X