இந்தியா

கொரோனா பரவலை தடுப்பது எப்படிஅமைச்சரவையில் ஆலோசனை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா பரவலை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத் துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, கலெக்டர் அருண், டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கான காரணங்கள், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், ஊரடங்கில் மீண்டும் எத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என ஆலோசிக்கப்பட்டது. எதிர்கால சூழ்நிலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறைக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X