பொது செய்தி

தமிழ்நாடு

துணை மின்நிலையம் திறப்பு

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஆசனுார் கிராமத்தில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய துணை மின் நிலையம் திறப்பு விழா நடந்தது.

உளுந்துார்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஆசனுார் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள, சிட்கோ தொழிற்பேட்டை மையத்தில், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33/11 கிலோ வாட் புதிய துணை மின் நிலையத்தை உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., குமரகுரு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், மின்வாரிய தலைமை பொறியாளர் துரைசாமி, மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி, உளுந்துார்பேட்டை செயற்பொறியாளர் சர்தார், உதவி செயற்பொறியாளர்கள் மோகன், எழிலரசன், மின்வாரிய கூட்டமைப்பு தலைவர் ரங்கராஜன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் மணிராஜ், நகர செயலர் துரை, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சாய்ராம், கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் அன்புச்செல்வன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் மணிராஜ் உட்பட நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஆசனுார் துணை மின் நிலையம் மூலம் ஆசனுார், திருப்பெயர், எடைக்கல் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமப்புறங்கள் மட்டுமின்றி அங்குள்ள விவசாயிகளும் பயன்பெறுவர் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X