பரவை மார்க்கெட் ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு வீட்டுத்தனிமை| Dinamalar

தமிழ்நாடு

பரவை மார்க்கெட் ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு வீட்டுத்தனிமை

Updated : ஜூன் 17, 2020 | Added : ஜூன் 17, 2020 | கருத்துகள் (1)
Share
மதுரை: மதுரை பரவை காய்கறி மொத்த மார்க்கெட் ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டனர். தினமும் 400 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இம்மார்க்கெட்டிற்கு வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து காய்கறிகள் வருகின்றன. இரவு 9:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை ஒரு நாளில் ரூ.15 கோடிக்கு வர்த்தகம் நடக்கும். லோடுமேன், ஊழியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் பணியில்
பரவை மார்க்கெட் ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு  வீட்டுத்தனிமை

மதுரை: மதுரை பரவை காய்கறி மொத்த மார்க்கெட் ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டனர். தினமும் 400 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


இம்மார்க்கெட்டிற்கு வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து காய்கறிகள் வருகின்றன. இரவு 9:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை ஒரு நாளில் ரூ.15 கோடிக்கு வர்த்தகம் நடக்கும். லோடுமேன், ஊழியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுவர். இங்கு மொத்தக் கடை உரிமையாளர், அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கியது.கோயம்பேடு நிலை வராமல் தடுக்க மார்க்கெட்டை மூட உத்தரவிட்ட கலெக்டர் வினய், மறு அறிவிப்பு வரும் வரை திறக்க தடை விதித்துள்ளார். மார்க்கெட் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பாளர்களாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா நியமிக்கப்பட்டுள்ளனர். மார்க்கெட்டின் ஒரு பகுதியில் முகாம் அமைத்து தினமும் 400 பேரை பரிசோதிக்க உள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்க்கெட்டில் பணி செய்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குடும்பத்தினரும் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். தினமும் 400 பேருக்கு நடக்கும் பரிசோதனையில் யாருக்காவது தொற்று உறுதியானால் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X