தமிழ்நாடு

தீவிரம் தமிழக கேரள எல்லையில் சோதனை.... கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement
 தீவிரம் தமிழக கேரள எல்லையில்  சோதனை.... கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

கூடலூர்: தேனி இடுக்கி மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கேரளாவில் இருந்து தமிழகப்பகுதிக்கு இ--பாஸ் பெற்று வருபவர்கள் அனைருக்கும் லோயர்கேம்பில் எச்சில், சளி மாதிரி எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான முடிவுகள் வந்து விடுகின்றன. அதுவரை அவர்கள் லோயர்கேம்ப் தனிமை வார்டில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தேனி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இல்லை என்றால் வீட்டிற்கு அனுப்பி 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.


அனுமதி



இந்நிலையில் லோயர்கேம்பில் தனிமைப்படுத்தியவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் கேரளா, இடுக்கி மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களால் மேலும் பரவும் அபாயம் உள்ளது. அதனால் இதைத்தடுக்க இருமாநில எல்லைப்பகுதியான குமுளியில் துணை தாசில்தார் சுருளி தலைமையில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் வைத்திருப்பவர் களை மட்டும் குமுளி வழியாக லோயர்கேம்ப் பரிசோதனைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். அங்கு அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு தனிமை வார்டில் கண்டிப்பாக தங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


1,532 பேர்



வருவாய்த்துறையினர் கூறியதாவது:இதுவரை கேரளாவில் இருந்து குமுளி வழியாக இ பாஸ் மூலம் தமிழகப்பகுதிக்கு 1,532 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தனிமை வார்டில் 70 பேர் தங்கியுள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பப்பட்டுள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X