சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு மாதம் சிறை த

Added : ஜூன் 17, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு மாதம் சிறை தண்டனை விதித்து சப் கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கர்னத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் சக்திவேல் 42. அதே பகுதியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26ம்தேதி ஊராட்சி அலுவலக பணி காரணமாக சென்றபோது, மங்கலம்பேட்டை அம்பேத்கர், 32, ரஞ்சித், ராஜசேகர் ஆகியோர் சக்திவேலை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மங்கலம்பேட்டை போலீசார் அம்பேத்கர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இவ்வழக்கில் ஈடுபட்ட அம்பேத்கர் மீது ஏற்கனவே மங்கலம்பேட்டை போலீசில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.அம்பேத்கர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலும் நன்னடத்தையை மீறியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்கலம்பேட்டை போலீசார் சப் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.இதுதொடர்பாக விசாரணை நடத்திய சப் கலெக்டர் பிரவீன்குமார், அம்பேத்கருக்கு ௭ மாத சிறை தண்டனைக்கு உத்தரவிட்டார். பின்னர், இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் அம்பேத்கரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X